மும்பையில் நட்சத்திர விடுதி ஒன்றின் 19-வது மாடியில் இருந்து கீழே குதித்து, 24 வயது கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூருவைச் சேர்ந்த அர்ஜூன் பரத்வாஜ் என்ற அந்த மாணவர் மும்பையில் தங்கி படித்து வந்துள்ளார். போதைப் பழக்கத்திற்கு அடிமையான இவர், கல்லூரி தேர்வுகளிலும் தோல்வி அடைந்ததால் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதனால், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த மாணவர், தன்னுடைய தற்கொலை காட்சிகளை பேஸ்புக்கின் 'live' ஆப்ஷனை பயன்படுத்தி நேரலையாக ஒளிபரப்பியுள்ளார்.
இதையடுத்து, மாடியிலிருந்து குதிக்கும் முன் ’எப்படி தற்கொலை செய்துகொள்ள வேண்டும்’ என மிகவும் கேளிக்கையான முறையில் நேரலையில் பதிவு செய்துள்ளார். அதில், முதலில் கடிதத்தை எழுதிவிடவேண்டும் என்று தெரிவித்த அவர், அடுத்து மதுவை குடிக்க வேண்டும் என பதிவு செய்தார் . மதுவை குடித்துக்கொண்டே சிகரெட்டை பற்றவைத்த அவர் தட்டில் இருந்த நூடுல்ஸை எடுத்து சாப்பிட்டத் தொடங்கினார் . பின் அனைவருக்கும் புன்னகையுடன் ‘bye' சொன்ன இளைஞர், ‘என்னுடைய தற்கொலை காட்சிகளை மகிழ்ச்சியாக கண்டுகளியுங்கள்’ என தெரிவித்துவிட்டு மாடியில் இருந்து குதித்துவிட்டார்.
மாடியில் இருந்து குதித்த பரத்வாஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழிந்தார். சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போதைப் பழக்கத்திற்கு அடிமையான இளைஞர் தன்னுடைய தற்கொலை காட்சிகளை பேஸ்புக் நேரலையில் ஒளிபரப்பிவிட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval