முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு வருமானத்தை விட 8.12 சதவீதமே அதிகமாக உள்ளதால் அவரை விடுதலை செய்வதாக கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்துள்ளார்.
10 சதவீதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தால், வழக்கிலிருந்து விடுவிக்கலாம் என்று சட்டத்தில் கூறப்பட்டிருப்பதால் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதாவது ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 37,59,02,466 ரூபாய் என்றும் அவரது வருமானம் 34,76,65,654 என்று கணக்கிட்டுள்ள நீதிபதி குமாரசாமி, வருமானத்துக்கு அதிகமாக 2,82,36,812 ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக கூறியுள்ளார்.
அதாவது, 8.12 சதவீத அளவுக்கு வருமானத்தை விட சொத்து அதிகமாக இருப்பதாக கூறிய நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
courtesy;malaimalar
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval