தஞ்சாவூர் மாவட்டம் முத்துபேட்டையை சேர்ந்தவர் முகமது இக்பால்(44) இவர் துபாயில் 17 வருடமாக பேருந்து ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். தற்போது தமிழ் மொழியில் ஆன்லைன் வர்த்தக இணையதளம் தொடங்கியுள்ளதோடு ஐடி துறையிலும் சாதித்து வருகிறார்.
பள்ளி படிப்பை பெற்றுள்ள இவர் ஓட்டுநராக பணிபுரிந்தாலும் ஐடிதுறையில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்துள்ளார். தனது விடுமுறை நாட்களில் கிடைக்கும் நேரத்தில் ஐடி துறையின் தொழில் நுட்பங்களை கற்று வந்துள்ளார். தற்போது அவரே இணையதளங்களை வடிவமைத்து கொடுப்பதோடு துபாயில் அல் மின்மா என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கி முதல் முறையாக தமிழில் ஆன்லைன் வர்த்தக இணையதளம் http://dubaibazaar.in/ தொடங்கியுள்ளார்.
இதன் மூலம் பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே வெளிநாட்டு பொருட்களை வாங்க முடியும். டிரைவராக பணியாற்றி கொண்டு ஐடிதுறையிலும் சாதித்து வரும் இவர் உழைக்கும் வர்க்கத்திற்கு வழிகாட்டியாக திகழ்கிறார். இது குறித்து இக்பால் கூறுகையில்: ஐடித்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது ஆனால் ஒரு சிலர், ஏன் இந்த வீண் வேலை பஸ்சை ஓட்டும் நமக்கு இதெல்லாம் தேவையா என்றார்கள். ஆனாலும் நாம் ஐடி துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னால் முடிந்த வற்றை கற்று கொண்டேன் இப்போது நானே இணையதளங்களை வடிவமைத்து கொடுக்கிறேன் அதோடு தற்போது என்னுடைய சேமிப்புகளை முதலீடு செய்து மிகப்பெரிய அளவில் உலகில் முதல் முறையாக தமிழ்மொழியில் வெளிநாட்டு பொருட்களை பெறுவதற்தாக ஆன்லைன் இணையதளம் தொடங்கியுள்ளேன் .நிச்சயம் எம்மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் தன்னம்பிக்கையுடன்.
நன்றி
தினகரன்
தினகரன்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval