அமைச்சர்களின் இலாகாக்களின்படி தமிழக அமைச்சரவையின் வரிசைப் பட்டியலை தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
1. ஜெயலலிதா முதல்-அமைச்சர்- பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப்பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் மற்றும் உள்துறை.
2. ஒ.பன்னீர்செல்வம்-நிதித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர்.
3. நத்தம் ஆர்.விஸ்வநாதன்-மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்.
4. ஆர்.வைத்திலிங்கம்-வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர்.
5. எடப்பாடி கே.பழனிசாமி-நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் வனத்துறை அமைச்சர்.
6. பி.மோகன்-ஊரகத் தொழில் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.
7. பி.வளர்மதி-சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர்.
8. பி.பழனியப்பன்-உயர் கல்வித்துறை அமைச்சர்.
9. செல்லூர் கே.ராஜூ-கூட்டுறவுத்துறை அமைச்சர்.
10. ஆர்.காமராஜ்-உணவுத் துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்.
11. பி.தங்கமணி-தொழில் துறை அமைச்சர்.
12. வி.செந்தில் பாலாஜி-போக்குவரத்துத்துறை அமைச்சர்.
13. எம்.சி.சம்பத்-வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.
14. எஸ்.பி.வேலுமணி-நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர்.
15. டி.கே.எம். சின்னய்யா-கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர்.
16. எஸ்.கோகுல இந்திரா-கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்.
17. எஸ்.சுந்தரராஜ்-இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்.
18. எஸ்.பி.சண்முகநாதன்-சுற்றுலாத்துறை அமைச்சர்.
19. என்.சுப்ரமணியன்-ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்.
20. கே.ஏ.ஜெயபால்-மீன்வளத்துறை அமைச்சர்.
21. முக்கூர் என்.சுப்ரமணியன்-தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்.
22. ஆர்.பி.உதயகுமார்-வருவாய்த்துறை அமைச்சர்.
23. கே.டி.ராஜேந்திர பாலாஜி-செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்.
24. பி.வி.ரமணா-பால்வளத்துறை அமைச்சர்.
25. கே.சி.வீரமணி-பள்ளிக்கல்வி துறை அமைச்சர்.
26. தோப்பு என்.டி.வெங்கடாசலம்-சுற்றுச்சுழல் துறை அமைச்சர்.
27. டி.பி.பூனாச்சி-கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர்.
28. எஸ்.அப்துல் ரஹீம்-பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்.
29. டாக்டர்.சி.விஜயபாஸ்கர்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval