ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கிவிட்டாலே குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து விடும். ஆனால் இவ்வாண்டு மே மாதத்திலிருந்தே சீசன் தொடங்கி விட்டது. கடந்த ஒரு மாதமாகவே அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது.
குற்றாலம் அருவியில் தண்ணீர் நல்லா விழுது என்று செய்தியை கேள்விப் பட்டதுமே அனைவரும் குடும்பம் சகிதமாக கார்களிலும், வேன்களிலும் கூட்டமாக கிளம்பிவிடுவார் குற்றாலத்திற்கு. அதுவும் சனி ஞாயிறுகளில் கூட்டத்திற்கு கேட்கவே வேண்டாம். விசிலும், உற்சாகமுமாய் அருவியில் குளித்து ஆட்டம் போட குவிந்து விடுவார்கள். இதமான சாரல், மிதமான வெயில், குளுமையான காற்று இதுதான் குற்றாலத்தில் சீசன் தொடங்கியதற்கான அறிகுறி. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் அங்கு குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் நீராடி மகிழ்கின்றனர்.
குற்றாலத்தில் பாய்ந்து வரும் அருவிகளில் குளிப்பதென்பது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமான விஷயம் தான். அதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் அங்குஆண்களும் பெண்களும் குளிக்கும் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் சிந்தித்து பார்க்க கடமைப் பட்டுள்ளோம். அங்குள்ள நிலவரப்படி ஆண்கள் எந்த நிலையிலும் சுதந்திரமாக குளிக்க முடிகிறது. அவர்கள் அரை நிர்வாணம் அல்லது முக்கால் நிர்வாணம் என எந்த நிலையில் குளித்தாலும் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால் பெண்களின் நிலைதான் மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. பெண்கள் குளிப்பதற்காக தனி இடம் ஒதுக்கி இருந்தாலும் அது அவ்வளவாக பாதுகாப்பு இல்லாத அமைப்பாகதான் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் பெண்களின் குளியலை பார்க்கலாம் என்கிற நிலையாகவே இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஏராளமாக தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. வக்கிரகுணம் கொண்ட ஆண்களின் பார்வைக்கு தினந்தோறும் பெண்களின் குளியல் விருந்தாகவே அமைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் செல்போன்கள் மூலம் ஜூம் லென்சை பயன்படுத்தி ஏராளமான பெண்களின் அரைகுறை நிர்வாணக் காட்சிகள் (அவர்கள் அறியாமலேயே) அங்கு படம் பிடிக்கப் படுகின்றன. அதன்பின் அவைகள் ஃபேஸ்புக், ட்விட்டர் என ஏராளமான சைட் மூலம் அனைவருக்கும் விருந்தளிக்கப் படுகிறது. ஆமாம் இதுபோன்ற காட்சிகள் நாள்தோறும் வந்த வண்ணம் இருக்கின்றன.
ஆகவே குற்றாலத்திற்கு சென்று குளிக்க விரும்பும் பெண்களே! தயவு செய்து தாங்களின் பாதுகாப்பு குறித்து சற்றே சிந்தியுங்கள். முக்கியமாக தாங்களின் கற்பு நிலைக்கு எவ்வித பங்கமும் ஏற்படாத சூழ்நிலையாக இருக்கின்றதா என தயவு செய்து ஆராய்ந்து அதன்பின் குளிப்பதற்கு முன் வாருங்கள். இல்லையேல் குற்றாலத்தில் குளிக்காமல் இருப்பது மிகவும் நல்லது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval