Tuesday, May 26, 2015

தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழி்க்காத நல்ல எம்.பிக்கள்

நாட்டின் பெரும்பாலான எம்.பிக்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்காமல் இருப்பதாக புள்ளியியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
parliamentநாட்டில் உள்ள 542 தொகுதிகளில் ஆண்டு தோறும் தொகுதி மேம்பாட்டிற்காக சுமார் 5 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி மூலம் எம்.பி ஒருவர் தனது தொகுதியில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடியும். இருப்பினும் கடந்த 15-ம் தேதி வரையில் எவ்வித பணியையும் மேற்கொள்ளாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆளும் கட்சியை சேர்ந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சட்டத்துறை அமைச்சர் சதானந்தாகவுடா, ரசாயணத்துறை அமைச்சர் அனந்த குமார் சிறு மற்றும் குறுந்தொழில் துறை அமைச்சர் கல்ராஜ்மிஸ்ரா, நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி ஆகியோர் தங்களது தொகுதி நிதியை பயன்படுத்தாமல் உள்ளனர்.
அதே போல் தொகுதி மேம்பாட்டு நிதியை முழுவதுமாக பயன்படுத்தாத மாநிலத்தை பொறுத்த வரை யில் உ.பி. முதலிடத்தையும், மகராஷ்டிரா, பீகார் போன்றவை அடுத்தடுத்த இடத்தையும் பிடித்து வருகின்றன. தமிழ்நாடு , கேரளா , மேற்கு வங்க மாநிலங்களை பொறுத்தவரையில் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியைபெரும்பாலான அளவிற்கு பயன்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது.
எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை கடந்த 1993-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது 5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பி்ன்னர் 1994-95-ல் ஒரு கோடி ரூபாயாக ஒதுக்கப்பட்டது. 1998-ல் அவை இரண்டு கோடியாக உயர்த்தப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து இந்நிதியி்ன் அளவு 5 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval