மத்தியில் மோடி அரசு ஆட்சியேற்ற பிறகு நாட்டில் மத சகிப்பு தன்மை குறைந்துவிட்டதாக அமெரிக்க அரசின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் குற்றசாட்டு சுமத்தியுள்ளது.
சர்வதேச மதச் சுதந்திர ஆணையம் என்பது அமெரிக்க அரசால் உலக நாடுகளில் பேணப்படும் மத சுதந்திரம் பற்றி கண்காணித்து அறிக்கை அளிக்க அமைக்கப்பட்டுள்ள ஆணையம் ஆகும். தற்போது இந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மோடி அரசு ஆட்சியேற்ற பிறகு நாட்டில் மத சகிப்பு தன்மை குறைந்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் தாய் மதத்துக்கு திரும்புதல் எனும் பெயரில் மத மாற்றம், மத மாற்றம் பிரச்சாரம், பாஜக தலைவர்கள் சிறுபான்மையினர் மற்றும் சமய அமைப்புக்கள் பற்றி இழிவாக பேசுவது ஆகியவை அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த பிப்ரவரி மத்தியில் பிரதமர் மோடி, மத சுதந்திரத்துக்கு ஆதரவாக பேசியது சாதகமான விஷயம் என அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval