Tuesday, May 12, 2015

சுவனத்தில் ஒரு வீடு

Article 1 The Holy Qur'an Surah 93. Ad-Duha (The Morning Hours ...தாங்கள் படிப்பதோடு பலரும் பலன் பெரும் வகையில் share செய்யவும்
உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கென்று ஒரு வசிப்பிடம் வேண்டும் என்பது அவனது அத்தியாவசிய தேவையாகும் .இத்தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்க்காக தனது ஆயுளின் பெரும் பகுதியை ஒவ்வொரு மனிதனும் செலவிடுகிறான் . இருப்பினும் அதை முழுமையாக அடைந்து கொள்ள முடிவதில்லை . அடைந்து கொண்டாலும் இங்கணம் அவன் தேடிக்கொண்ட வீடானது அவனது வாழ்நாளில் நிரந்தரமான நிம்மதியையோ மகிழ்ச்சியையோ தருவது இல்லை
அதை முழுமையாக அனுபவிப்பதற்கு முன்பாக மரணம் அவனை முந்தி கொள்கிறது, இவன் தேடி சேர்த்ததை இவனுக்கு பின்னால் இவனது வாரிசுகளோ, அல்லது சொந்த பந்தகளோ அனுபவிக்கிறார்கள். இவனால் அனுபவிக்க முடிவதில்ல
காலமாற்றத்தால், இயற்கை பேரளிவுகளால் என்நேரமும் அழிந்து விடலாம் என்ற நிலைகளில் உள்ள வீட்டைத்தான் கனவு இல்லம் என கருதி, தனது வாழ்நாளில் எப்படியேனும் அடைத்துவிட வேண்டும் என மனிதன் தனது ஆயுளையே தியாகம் செய்கிறான்.
ஆனால் நாம் அன்றாட சந்திக்கும் ( கொசு, மூட்டைபூச்சி, எலி, பல்லி, மின்சாரம்மின்மை,கழிவறை பிரச்சினை,நீராதாரதேவை ,திருட்டுபயம்,மரணபயம் இப்படி ...)எவ்வித தொல்லைகளுக்கும் அழிவுகளுக்கும் அப்பாற்பட்டு ,மின்சாரம் தேவைபடாத. கழிவறையில் இல்லாத,திருடன் புகமுடியாதா, இவற்றுக்கெல்லாம் மேலாக மரணமே நுழையாத என்றும் நிலையான பொலிவுடன் .என்னிலடகாத, கற்பனைக்கும் எட்டாத எல்லா வசதிகளையும் நிறைவாக தன்னகத்தே கொண்ட என்னற்ற அரன்மனைகளை ,தனது ஒவ்வொரு அடியானுக்கும் தருவதாக அவனது தூதரின் வாயிலாக ஒவ்வொரு மூம்மினுக்கும் வாக்கு அளிக்கிறான் . இது தான் ஒவ்வொரு மூமினுக்கும் தனது கனவு இல்லமாக இருக்க வேண்டும்
எவ்வித பொருள்செலவோ . தியாகமோ இன்றி ,அதைப் பெருவதற்கான எளிய வழிகளை ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் தொகுத்து கீழே வழங்கப்பட்டுள்ளது . இதன்படி அமல் செய்து சுவர்க்கதில் என்னற்ற அரன்மனைகளுக்கு சொந்தகாரர்களாக ஆகுவதற்கு , நம் அனைவருக்கும் ஏக இறைவனாகிய அல்லாஹுத்தஆலா அருள் புரிவானாக
நாமும் அதற்கான முயற்சியை இன்றில் இருந்தே துவக்குவோம் வல்ல நாயன் அருள் புரிவானாக அமீன்
...
சொர்க்கத்தில் நமக்கு என ஒரு சொந்தவீடு
--------------------------------------------------------------
1, பள்ளிவாசல் கட்டுவது
நபி அவர்கள் (ஸல் ) அருளினார்கள் யார் ஒருவர் அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளியை கட்டுவாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான் ( புஹாரி – முஸ்லிம் )
2. சூரத்துல் இஹ்லாஸ் ஓதுதல்
நபி அவர்கள் (ஸல் ) அருளினார்கள் யார் ஒருவர் குல்ஹுவல்லாஹுஅகத் (சூரத்துல் இஹ்லாஸ் ) சூராவை தினமும் தொடர்ந்து பத்து முறை ஓதுவாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான் இதை முஆத் பின் அனஸ் (ரழி) அறிவிகிறார்கள் (ஸஹீஹுல் ஜாமி – 6472 )
3. தனது குழந்தையை இறந்துவிட்டால் பொறுமையோடு அல்லாஹ்வை புகழ்தல்
நபி அவர்கள் (ஸல் ) அருளினார்கள் யார் ஒருவர் தனது குழந்தை மரணித்துவிட்டால் , உடனே மலக்குக்களிடம் அல்லாஹ் எனது அடியானின் இதயகனியை நீங்கள் பரித்து வந்து விட்டீர்களா என கேட்பான் அதற்குஅவர்கள் ஆம் பரித்து வந்து விட்டோம் என்பார்கள் மீண்டும் அல்லாஹ் அவர்களிடம் எனது அடியான் இதயகனியை நீங்கள் பரித்த போது என்ன சொன்னான் என கேட்பான் அதற்கு அவர்கள் இறைவா அந்த அடியான் அல்ஹம்துலில்லாஹ் , இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று சொன்னான் என மலக்குகள் கூறுவார்கள், அல்லாஹ் மலக்குக்களிடம் அந்த அடியானுகாக சொர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டுங்கள், அந்த வீட்டிற்கு ‘’ புகழுக்குரிய வீடு ‘’ என்று பெயரிடுகள் என சொல்வான் இதை அபுமூஸா (ரழி)அவர்கள் அறிவிகிறார்கள் ( ரியாலுஸ்ஸாலிஹீன் – 362-1 )
4. கடை வீதியில் ஒதவேண்டிய திக்ரை ஓதுதல்
எவர் ஒருவர் கடைவீதியில் நுழைத்தவுடன் ‘’ லாயிலாக இல்லல்லாஹ் ,,வஹ்தஹு லாஷரிக்கலஹு லஹுல்முல்கு .வலஹுல்ஹம்து யுஹ்யி வ யுமீது வஹுவ ஹய்யுன் லா யமூத்து பி யதிகல் ஹைரு, வஹுவ அலா குல்லி சையின் கதிர் என்று சொல்கிறாரோ அவருக்கு அல்லாஹ் பத்து லட்சம் நன்மைகளை வழங்குகிறான் , அல்லாஹ் பத்து லட்சம் தீங்குகளை விட்டும் விலக்குகிறான் , பத்து லட்சம் அந்தஸ்துகளை உயர்த்துகிறான் மேலும் அவர்களுக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான் என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள் இதை இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிகிறார்கள் ((ஸஹீஹுல் ஜாமி – 1113 -1 )
5. ஜமாத் தொழுகையின் வரிசையில் ஏற்படும் இடைவெளியை நிரப்புதல்
எவர் ஒருவர் ஜமாத் தொழுகையின் போது வரிசையில் ஏற்படும் இடைவெளியை நிரப்புகிறாரோ ,அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான் என நபி (ஸல் ) அவர்கள் அருளினார்கள் , இதை அன்னை ஆயிஷா (ரழி)அவர்கள் அறிவிகிறார்கள் . ((ஸஹீஹுல் ஜாமி –- 1843)
6. பர்ளான தொழுகையில் முன் பின் சுன்னத் 12 ரக்கஅத்களை தொடர்ந்து தொழுதல்
எவர் ஒருவர் பர்ளான தொழுகையின் முன் பின் சுன்னத் 12 ரக்கஅத்களை (ளுஹருக்கு முன் இரண்டு இரண்டாக நான்கும் , ளுஹருக்கு பின் இரண்டும் மகரிபுக்கு பின் இரண்டும் , இஷாவிற்கு பின் இரண்டும் பஜர்க்கு முன் இரணடும் மொத்தம் 12 ரக்கஅத்களை தொடர்ந்து தொழுது வருபவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான் என நபி (ஸல் ) அவர்கள் அருளினார்கள் , இதை அன்னை ஆயிஷா (ரழி)அவர்கள் அறிவிகிறார்கள் . (( இப்னுமாஜா, திருமிதி )
7.அல்லாஹுவிர்காக ஹிஜ்ரத் செய்தல்
எவர் அல்லாஹ்வை ஈமான்கொண்டு ,என்னை பின்பற்றி அல்லாஹுவிறகாக நாடு துறந்து ஹிஜ்ரத் செய்கிறாரோ அவர்களுக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான் என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள் இதை பளாழத் பின் அபீத்(ரழி) அவர்கள் அறிவிகிறார்கள் ((ஸஹீஹுல் ஜாமி – 235 -1)
8. எவர் ஒருவர் தன் பக்கம் உரிமை இருந்தும் ,பிறருக்கு விட்டு கொடுகிறாரோ அவருக்கு சொர்க்கத்தில் கீழ்தளத்தில் ஒரு வீடு கிடைபதற்கும் எவர் ஒருவர் நகைச்சுவைக்காககூட பொய் பேசாமல் தன்னை பேணி கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்தில் நடுதளத்தில் ஒரு வீடு கிடைபதற்கும், அழகிய நற்பண்புகளை தனதாக்கிக்கொள்பவருக்கு சொர்க்கத்தில் மேல்தளத்தில் ஒரு வீடு கிடைபதற்கும், நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன் என நபி (ஸல் ) அவர்கள் அருளினார்கள். இதை அபீ அமாமா (ரழி)அவர்கள் அறிவிகிறார்கள் .
)
சொர்க்கத்தில் நமகென ஒரு தோட்டம்
---------------------------------------------------------
வீடு மட்டும் இருந்தால் போதுமா ,அதை சுற்றி தோட்டம் .தோப்பு, பூங்கா போன்றவை வேண்டாமா ,மனிதன் இதை விரும்புவான் என்பதை அவனை படைத்த இறைவனுக்கு தெரியாதா, இதோ, இறைவன் தனது அடியானுக்கு பரிசளிக்கும் அரண்மனையை சுற்றி தோட்டம் அமைத்துத் தருவதாகவும் வாக்களிக்கிறான்.
இவ்யுலகில் நாம் அமைக்கும் தோட்டம் போன்றது அல்ல இறைவன் ஏற்படுத்தும் தோட்டம் ,அது எக்காலமும் பலன்தரக்கூடிய, நிலையான சொர்க்கப் பூஞ்சோலைகளாகும், அத்தகைய தோட்டங்களைப் பெருவதற்காண எளிய வழிமுறைகளையும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துத்தருகிறார்கள்.
இறைவனை நினைவுகூறுவதன் வழியாக அதனை நாம் பெற்றுகொள்ள முடியும், நபிவழியாக கீழே கொடுக்கபட்டுயுள்ள திக்ருகளை தொடர்ந்து ஓதிவருவோமானால் அரண்மனைகள் மட்டும் அல்லாது,அத்துடன் அழகிய தோட்டங்களையும் நமக்கு பரிசு அளிப்பதற்கு இறைவன் காத்து இருக்கிறான்,
இவ்யுலகில் பொருளை தேடுவதற்க்காக எந்த அளவிற்கு போராடுகிறோமோ அதைவீட பன்மடங்கு ஆர்வத்தோடு எல்லையில்லா இன்பங்களை தன்னகத்தே கொண்ட அரண்மனைகளையும் ,தோட்டங்களையும் நாம் ஒவ்வொருவரும் பெறுவதற்கு மிகுந்த ஆர்வத்தோடும், இறைவன் தருவான் என்ற நம்பிக்கையோடும் நமது வாழ்வில் எல்லா நிலைகளிலும் முயற்சி செய்ய வேண்டும் அதற்கு ஏக இறைவனாகிய அல்லாஹ் அருள் புரிவானாக
திக்ரு செய்வது
ஒருமுறை நபி (ஸல )அவர்கள் அபுஹுரைரா (ரழி ) அவர்களின் இல்லத்தின் வழியாக சென்றபொழுது அபுஹுரைரா (ரழி ) அவர்கள் தோட்ட வேலை செய்துகொண்டு இருந்தார்கள் .அதைகண்ட ரசூல் (ஸல்)அவர்கள்
அபுஹுரைராவே நீர் என்ன செய்துகொண்டு இருகிறீர்கள் என கேட்டார்கள், அதற்கு நான் மரங்களை நட்டு கொண்டு இருக்கிறேன் என சொன்ன பொழுது,அபுஹுரைராவே மரம் நடுவதை வீடசிறந்த ஒன்றை நான் அறிவித்துத் தரட்டுமா என கேட்டார்கள், அதற்கு நான் அறிவித்து தாருங்கள் யா ரஸுலுல்லாஹ என அபுஹுரைரா (ரழி ) அவர்கள் கூறினார்கள் ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வ லாயிலாஹ இல்லலாஹு வல்லாஹு அக்பர் என நீ ஒவ்வொரு முறை சொல்லும்போது அல்லாஹ் உமக்காக சொர்க்கத்தில் ஒரு மரத்தை நடுகிறான் என நபி (ஸல் ) அவர்கள் அருளினார்கள் , இதை அபுஹுரைரா (ரழி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் ( ஸஹிஹுல் ஜாமிஇ)
எவர் ஒருவர் தினமும் ஸுப்ஹானல்லாஹில் அழிம் வபிஹம்திஹி என கூறுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு ஈச்சமரத்தை நடுகிறான் என நபி (ஸல் ) அவர்கள் அருளினார்கள் , இதை ஜாபிர் (ரழி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் ( ஸஹிஹுல் ஜாமிஇ - 6429 )
தாங்கள் படிப்பதோடு பலரும் பலன் பெரும் வகையில் share செய்யவும்
courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval