Friday, May 22, 2015

அரபு மண்ணிலிருந்து இஸ்ரேலை துடைத்து எறிவோம் : சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை....!!


உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் கடற்கரை நகரமான ஜித்தாஹ் மாநகரில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் நேற்று மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இஸ்லாமிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பல்வேறு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் கலந்து கொண்ட சவூதி அரேபியாவின் இளவரசரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான சௌத் அல் பைசல் இஸ்ரேலை கடுமையாக தாக்கி பேசினார்.
அப்பொழுது அவர் பேசியதாவது....
எந்த ஒரு சமுதாயமும் தன்னை தானே மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ் அவர்களுடைய விதியை மாற்றுவதில்லை என்று திருக்குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி உலகிலுள்ள முஸ்லிம் நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.
அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஓர் உடலை போன்று இருக்க வேண்டும். உடலின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டால் எப்படி மற்ற பகுதி துடிக்கிறதோ அதேபோல் ஒரு முஸ்லிம் நாடு பாதிக்கப்பட்டால் மற்ற நாடுகள் துடிக்க வேண்டும் என்று கூறிய அவர் இஸ்ரேலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று கூறினார்.
இன்று நாம் ஒருவருக்கொருவர் பிரிந்து இருப்பதால் தான் இஸ்ரேல் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.
இதுதான் நமது பலவீனம், பிரிந்து கிடக்காமல் ஒன்று சேர்ந்தால் அனைத்து பிளவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கமுடியும், அரபு மண்ணிலிருந்து இஸ்ரேலை துடைத்து விடவும் முடியும் என்று கூறினார்.
பாலஸ்தீன் மீது கை வைக்க இஸ்ரேலுக்கு எந்த உரிமையும் கிடையாது. எந்த அருகதையும் கிடையாது. பலமுறை ஹமாஸ் சமாதான உடன்படிக்கைக்கு வருகை தந்தும் அதை இஸ்ரேல் முழுமையாக மறுத்துள்ளது, அதற்காக இஸ்ரேல் வெட்கப்படவும் இல்லை.
இஸ்ரேல் தன்னைத்தானே காட்டுக் கொள்கிறது என்று மேற்கத்திய நாடுகள் கூறுமேயானால் அதையே ஹமாஸ் தம்முடைய சொந்த மக்களை காப்பது மட்டும் தவறாகி விடுமா என்று கடுமையாக பேசினார்.
இஸ்ரேல் பாலஸ்தீன் மண்ணை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து வருகிறது. இதற்கு பெயர் தன்னை தானே தற்காத்து கொள்கிறோம் என்று கூறி வருகிறது.
ஐநா சபையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 29 நாடுகள் இஸ்ரேல் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வாக்குப்பதிவு செய்த போது 17 நாடுகள் யாருக்கும் வாக்களிக்காமல் நடுநிலை வகுத்தது.
இஸ்ரேல் மீது விசாரணை நடத்தக்கூடாது என்று எதிராக வாக்களித்த ஒரே நாடான அமெரிக்கா மீது நாங்கள் வருத்தத்தில் இருக்கிறோம். அமெரிக்காவின் இது போன்ற செயலால் இஸ்ரேலுக்கு இன்னும் ஊக்கமளிக்கும், சர்வதேச சட்டத்தை மீற வழிவகுக்கும் என்று அமெரிக்காவையும் சாடி பேசினார்.
இஸ்லாமிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் இஸ்ரேலை கடுமையாக கண்டித்து பாலஸ்தீனுக்கு செல்லக்கூடிய பாதைகளை திறந்து விட்டு பாலஸ்தீன மக்களை சுதந்திரமாக வாழ வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் சவூதி அரேபியா அரசாங்கம் தனது நிதியிலிருந்து 500 மில்லியன் டாலரை பாலஸ்தீன் மீள் கட்டுமானத்திற்காக வழங்குகிறோம் என்றும் 300 மில்லியன் டாலரை மருத்துவ உதவியாக வழங்குகிறோம் என்றும் கூறியுள்ளார்.
அப்பொழுது பாலஸ்தீனம் ஜெருசலத்தில் உள்ள முதல் கிப்லாவான புனித ஆலயம் பைத்துல் முகத்தஸை எவ்வித தடையும் இன்றி பாதுகாக்கப்படும் என்று சவூதி அரேபியா மன்னர் அப்துல்லாஹ்வால் உருதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval