Friday, May 1, 2015

செல்போன் ரோமிங், உள்ளூர் கட்டணம் குறைப்பு

copyஅண்மையில் நடந்த அலைக் கற்றை ஏலத் தொகை உயர்வு, அவைகளின் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு செலவினங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளதாம். இதனால் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம். எனவே கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்று இங்குள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் குரல் கொடுத்து வந்த நிலையில் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கடந்த 9–ந் தேதி செல்போன் ரோமிங் மற்றும் எஸ்.எம்.எஸ். கட்டண உச்சவரம்பை குறைத்துள்ளது.
இதன் அடிப்படையில் வேறு வழியின்றி ஏர்டெல், ஏர்செல், வோடபோன், ஐடியா, ரிலையன்ஸ் உள்பட பல முன்னணி செல்போன் நிறுவனங்களும் தங்கள் உள்ளூர், ரோமிங் மற்றும் எஸ்.எம்.எஸ். கட்டணங்களை குறைத்துள்ளது. ரோமிங் கட்டணங்கள் 40 சதவீதமும், ரோமிங் எஸ்.எம்.எஸ். கட்டணம் 75 சதவீதமும், உள்ளூர் கட்டணம் 23 சதவீதமும், உள்ளூர் எஸ்.எம்.எஸ். கட்டணம் 74 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது.
ரோமிங் கட்டணம் நிமிடத்திற்கு ரூ.1.50–ல் இருந்து ஒரு ரூபாயாகவும், உள்ளூர் கட்டணம் ரூ.1.15–ல் இருந்து 80 காசாகவும், ரோமிங் அழைப்புகளுக்கான கட்டணமும் நிமிடத்திற்கு 75 காசில் இருந்து 45 காசாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக வோடபோன் தெரிவித்துள்ளது. இதேபோல பல நிறுவனங்களும் அறிவித்துள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இந்த கட்டண மாற்றம் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval