பிரிட்டிஷ் அரசாங்கம் பர்மிய நாட்டின் வரைபடங்கள் வரையும் போதுரோஹிங்கியா முஸ்லிம்களிடம் கலந்து ஆலோசிக்க வில்லை ..
2.எல்லைகள் வரைபடங்களில் உருவாக்கப்பட்டதன் விளைவு அவர்கள் பர்மிய நாட்டின் எல்லையோர மக்களாக பார்க்கப்பட்டனர். அவர்களின் பூர்வாங்க பகுதிகள் பர்மிய எல்லை பகுதியின் அரசியல் விரிவிற்கு குறுக்கீடாக அமைந்தது .
3.1948 ஆம் ஆண்டு பர்மிய நாடு பிரிட்டிஷ் காலணியால் ஆள்வதற்கு தேர்வு செய்யப்பட்டது மற்றும் உள்நாட்டு பூர்வாங்க மக்களாக உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது ..
4.1962 முதல் 1974 வரை பிறகு ஆட்சி செய்த ராணுவ ஆட்சியையும் அவர்களை பூர்வாங்க மக்களாக ஏற்றுக்கொண்டு ஆட்சி செய்தது .
5.1950 ஆம் ஆண்டு பின்னோக்கி சென்று பார்க்கும் பொழுது, பர்மிய நாட்டில் மேற்கு பகுதியில் ராணுவத்தில் உள்ள சிறுபான்மை இனக்குழுக்கள் சில விசயங்களை கையாண்டது .
6.முதலில் ,அவர்கள் ரோஹிங்கியா முஸ்லிம்களோடு இணைந்து அரக்கன் பகுதியில் வசிக்கும் புத்த பெரும்பான்மை மக்களை அடக்குவதற்கு பலரையும் தெரிவு செய்ய முயன்றது ..
7.பிறகு ராணுவம் அரக்கன் பிரிவினைவாதிகளை கடுமையாக நசுக்கியது
8.1978க்கு பிறகு பர்மிய அரசு ரோஹிங்க்யா முஸ்லிம்களை இனவெறியோடு பார்த்தது .
9.பிற காலங்களுக்கு பிறகு ,அவர்களின் தேசிய பூர்வாங்க உரிமையை ரத்து செய்து , வங்காள நாட்டில் இருந்து புலம்பெயர்ந்தவர்களாக நடத்தப்பட்டனர்.
10.மேலும் அரக்கன் பகுதியை சேர்ந்த புத்த மக்கள் ரோஹிங்க்ய முஸ்லிம்களை தவறாக புலம்பெயர்ந்தவர்களாகவே பார்க்க முற்பட்டனர் .
11.முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்கள் புத்த பெரும்பான்மை மக்களால் கூறப்பட்டது
12..ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்க்யா முஸ்லிம்களை தடுப்புக்காவல் முகாம்களில் பிடித்து வைத்தனர். அவர்களின் சொந்த பாதுகாப்பிற்கு கூட வெளியேற முடியாது.
13.அவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை மட்டும் வைத்திருக்க அனுமதி இருந்தது, பிப்ரவரியில் அவர்கள் தங்கள் வாக்கு உரிமைகளை முழுவதுமாக இழந்தனர் .
14.அரக்கன் மற்றும் ரோஹிங்க்யா இடையே நடைபெற்ற இனவாத மோதல்களை தட்டிக்கழிக்கும் ஒன்றாக இருக்க பர்மிய அரசாங்கம் முயன்று வருகின்றது .
15.நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் குறிப்பிடுகையில், ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான அரசாங்கத்தால் திட்டமிட்டு கவனத்துடன் கையாளப்படுகின்றது.
-நன்றி .. அபூஷேக் முஹம்மத்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval