Wednesday, May 6, 2015

குளிர்பானங்களால் ஏற்படும் ஆபத்துகள்: அதிர்ச்சி தகவல்

327051-softஉணவுகளை உட்கொண்ட பின் குளிர்பானங்களை அருந்துவதால் உடலுக்கு ஆபத்துகள் ஏற்படுகின்றன. உணவு உட்கொண்ட பின்னர், குளிர் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய், கொழுப்புகள் ரத்த நாளங்களில் படியச் செய்வதே இதற்கு காரணம். உணவு உண்ட பின் குளிர்பானம் அருந்துவது இதயபாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது.
இதனால் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் வரலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மாரடைப்பு நோய் உட்பட பல்வேறு இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும் போது கூல் தண்ணீரை தொடக்கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். குளிர் தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுத்தும் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.


நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே குளிர் தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள், அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval