Monday, May 11, 2015

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி-கவர்னர் ரோசய்யா வாழ்த்து


சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி-கவர்னர் ரோசய்யா வாழ்த்துசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆன தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி மற்றும் கவர்னர் ரோசய்யா வாழ்த்து தெரிவித்தனர். 
சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் சிறப்பு நீதிபதி குமாரசாமி இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கினார். கீழ்கோர்ட் வழங்கிய தண்டனையை ரத்து செய்ய நீதிபதி குமாரசாமி, குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதனால், ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். 

இதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ள நிலையில், ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

கவர்னர் ரோசய்யாவும் வாழ்த்து தெரிவித்தார். இதேபோல், மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ், நஜ்மா ஹெப்துல்லா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
courtesy;malaimalar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval