ஐ.ஐ.டி. காரக்பூர், டெக்சாஸ், ஆஸ்டின் மற்றும் இல்லினாய்ஸ், அர்பனா-சாம்பைனில் ஆகிய பல்கலைக்கழகங்கள் சேர்ந்து ‘ஆக்டிவ்பாஸ்’ என்ற மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த புதிய முறை மூலம் நாம் தினந்தோறும் ஸ்மார்ட்போன், கணினியில் செய்யும் வேலைகள் அல்லது பயன்படுத்தும் விஷயங்களேயே கேள்விகளாக அமைத்து, அந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலம் கடவுச்சொல் இல்லாமல் ஸ்மார்ட்போன், கணினிகளை பயன்படுத்த முடியும்.
உதாரணமாக இன்று காலையில் வந்த முதல் குறுஞ்செய்தி எது? என்ற கேள்வியை பதிவு செய்யமுடியும். இந்த கேள்விக்கான பதில் ஸ்மார்ட்போன், கணினிகளுக்கும் அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதால், இது மிகவும் எளிதானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மென்பொருளை இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளதால் பொதுமக்கள் கொஞ்சகாலம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval