வாட்ஸ்அப்பில் விரைவில் விளம்பரங்களை வெளியிட முடிவு செய்யபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. விளம்பரங்கள் வெளியிடப்படும் பட்சத்தில் தேவையில்லாத செய்திகள் மற்றும் இணையதளங்களால் தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் பிரபலமான மொபைல் மெசேஜிங் சேவையான வாட்ஸ்அப்பை உலகம் முழுவதும் 800 மில்லியன் மக்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதுவரை இந்த மெசேஜிங் சேவையில் விளம்பரங்கள் செய்வதை தவிர்த்து வந்தது அந்த நிறுவனம். இதானல் பயனாளர்கள் தேவையற்ற இணையதளங்கள், செய்திகள் மற்றும் விளம்பரங்களின் தொல்லை இல்லாமல் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி
வந்தார்கள்.
இந்நிலையில் பாஸ்டனில் நடைபெற்ற ஒரு தொழில்நுட்ப மாநாட்டில் பேசிய பேஸ்புக் நிருவனத்தின் தலைமை நிதி அதிகாரி டேவிட் வேன்கர் ‘‘வாட்ஸ்அப்பை தொழில் முறையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமோகமாக உள்ளது. விரைவில் இது தொடர்பான தொழில் வாய்ப்புகள் பற்றி பரிசீலிக்கப்படும்” என தெரிவித்துள்ளார். எனவே விரைவில் உங்கள் மொபையில் வாட்ஸ்அப்பில் பக்கத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களை எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval