சென்னை, 2017-ம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-ஹஜ் விண்ணப்பம்2017-ம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடம் இருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு விண்ணப்பங்களை வரவேற்கிறது.சென்னை மகாத்மா காந்தி சாலையில் (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை) 13-ம் எண் கட்டிடத்தில் இயங்கிவரும் ரோஸிடவர், மூன்றாம் தளத்திலுள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து ஹஜ் 2017-க்கான விண்ணப்பப் படிவங்களை ஜனவரி 2-ந் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.ஜனவரி 24-ந்தேதிக்குள்இந்த விண்ணப்பங்களை www.ha-j-c-o-m-m-itt-ee.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும் உபயோகப்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மனுதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 24.‘வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம்’ என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயல்படுத்தி வருகிறது. ஜனவரி 24-ந் தேதியன்று அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்டு, குறைந்தது 28.2.18 வரையில் செல்லக்கூடிய எந்திரம் மூலமாக படிக்கத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும்.ஐ.எப்.எஸ். குறியீடு உடைய வங்கியிலுள்ள தங்களின் கணக்கு விவரங்களை மனுதாரர்கள் அளிக்க வேண்டும். ஹஜ் 2017 பற்றிய விவரங்களுக்கு ஹஜ் 2017-ற்கான வழிமுறைகளைப் படிக்கவும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் www.ha-j-c-o-m-m-itt-ee.gov.in என்ற இணையதளத்தையும் பார்வையிடலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு ஜனவரி 24-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
--தினத்தந்தி
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval