மும்பை, மராட்டியத்தில் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய மகள் திருமணத்தை முன்னிட்டு 90 ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்து உள்ளார். தன்னுடைய மகளின் திருமண பரிசாக வீடற்றவர்கள் 90 பேருக்கு வீட்டை வழங்கி உள்ளார் அவுரங்காபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் அஜய்.அவுரங்காபாத் மாவட்டம் லாசாரை சேர்ந்த ஆடை நிறுவனம் நடத்திவரும் தொழில் அதிபர் அஜய் முனாத் சுமார் 1.5 கோடி செலவில் 90 வீடுகளை கட்டி ஏழைகளுக்கு பரிசாக வழங்கி உள்ளார். சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நகர் உருவாக்கப்பட்டு உள்ளது. வீடுகளை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக அவர்கள் மூன்று தகுதிகளை வைத்திருந்து உள்ளனர். தனிநபர் ஏழையாக இருக்கவேண்டும், குடிசையில் வசிப்பவர்காகா இருக்கவேண்டும், போதைக்கு அடிமையாகாதரவாக இருக்க வேண்டும் என்ற தகுதிகளை கொண்டு பயனாளர்களை தேர்வு செய்து உள்ளனர். மகள் ஸ்ரேயாவின் திருமண விழாவை சிறப்பிக்க வித்தியாசமான முறையில் நடத்தலாம் என்று நினைத்த அஜய் முனாத் இந்நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளார். மணமகள் ஸ்ரேயா பேசுகையில், இந்நடவடிக்கையை நான் பெரிதும் பாராட்டுகின்றேன், இதை என் திருமண பரிசாக நினைக்கின்றேன் என்று மகிழ்ச்சி பொங்க கூறினார். இது பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. கொடுத்த ஐடியா என்று அஜய் குறிப்பிட்டு உள்ளார். இதுவரையில் புதிய நகருக்கு 40 குடும்பங்கள் குடியேறிஉள்ளது. மீதம் உள்ளவர்கள் விரைவில் குடியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமணம் போன்ற சுபகாரியங்களில் இது போன்ற மனநிறைவான செயல்களில் அனைவரும் ஈடுபட வேண்டும். சமுதாயம் குறித்து நமக்கு சில கடமைகள் உண்டு என்பதால் அதை நாம் நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம் என்று அஜய் கூறிஉள்ளார்.
--தினத்தந்தி
--தினத்தந்தி
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval