Friday, December 23, 2016

பாஸ்போர்ட் பெற இனி பிறப்புச் சான்றிதழ் தேவையில்லை.. எளிதாக்கியது வெளியுறவு அமைச்சகம்


Image result for indian passport imagesபாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது பிறப்புப் சான்றிதழ் தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதற்கு பதிலாக பான்கார்ட் உள்ளிட்ட ஆவணங்களை கொடுக்கலாம் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்யும் போது, விண்ணப்பத்துடன் பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக வைக்க வேண்டும். இந்த முறையை தற்போது மத்திய வெளியுறவு அமைச்சகம் மாற்றியுள்ளது. அதன்படி, 1989க்கு பிறகு பிறந்தவர்கள், பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது பிறப்பு சான்றிதழை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறப்புச் சான்றிதழுக்கு பதில் பிறந்த தேதியுடன் கூடிய பான்கார்டை கொடுத்தால் போதும். இது தவிர, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை போன்றவையும் பிறப்பு சான்றிதழுக்கு ஆதாரமாக வழங்கலாம். மேலும், திருமணமானவர்கள் தங்களது திருமண சான்றிதழை விண்ணப்பத்தின் போது அளிக்க தேவையில்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் பாஸ்போர்ட் பெறும் வழி எளிமை படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval