Monday, December 26, 2016

என்னை பார்க்க வரும் அதிகாரிகள் ‘பூங்கொத்து, பழங்கள் கொண்டுவர வேண்டாம்’; தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கண்டிப்பு


பொதுவாக தமிழக அரசுக்கு புதிய தலைமை செயலாளர் பொறுப்பேற்கும்போது, அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், ஐ.பி.எஸ். அதிகாரிகளும், அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க பூங்கொத்துகள், பழக்கூடைகள் கொண்டுபோவது வழக்கம். ஆனால், புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றவுடன், ‘‘தன்னை பார்க்க வரும் எந்த அதிகாரிகளும் பூங்கொத்து, பழக்கூடைகளை கொண்டுவர வேண்டாம். தங்களின் வாழ்த்துகளை மட்டும் தெரிவித்தால் போதும்’’ என்று கூறிவிட்டார்.
அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு அதிகாரிகளையும் உட்கார வைத்து, இனிமையாக பேசி, ‘‘நான் மட்டும் தனியாக அல்ல, நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்தே தமிழக அரசை நிர்வகிக்க போகிறோம்’’ என்று மகிழ்வூட்டும் குரலில் தெரிவித்தார். தலைமை செயலாளரின் இனிமையான இந்த சொற்கள், நேர்மையான அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதாகவும், உற்சாகமூட்டுவதாகவும், தெம்பூட்டுவதாகவும், பணிகளை இன்னும் வேகமாக செய்யத் தூண்டுவதாகவும் அமைந்திருந்ததாக ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுமட்டுமல்லாமல், அவரது கழுகு கண் பார்வையில் எந்த தவறும் கண்டுபிடிக்கப்படாமல் போகாது என்று அதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
courtesy;Daily thanthi

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval