வங்க கடலில் உருவாகிய ‘வர்தா’ புயல் சென்னை அருகே வேகமாக நகர்ந்து வருகிறது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கே 440 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. நெல்லூரில் இருந்து 490 கிலோ மீட்டர் தொலை விலும், மசூலிப் பட்டினத்தில் இருந்து 480 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த புயல் வடக்கு தமிழ்நாடு-தெற்கு ஆந்திரா இடையே சென்னை அருகே நாளை பிற்பகல் கரையை கடக்கிறது.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
வர்தா புயலால் 100 கி.மீ வேகத்தில் சென்னையில் காற்று வீசக்கூடும். கடந்த 1994-ல் சென்னையில் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.
நாளை ஒருநாள் மட்டும் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். வார்த் புயல் நாளை சென்னை அருகே கரையை கடக்க உள்ளதால் மீனவர்கள் அடுத்த 48 மணிநேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval