Friday, December 23, 2016

அமுங்கி போன அப்போலோ...!! கலக்கும் காவேரி...!! கருணாநிதியால் மவுசு

இந்தியாவின் மிக பிரபலமான மருத்துவமனைகளில் ஒன்று அப்போல்லோ. ஆந்திராவின் சித்தூர் மாவட்டதை சேர்ந்த பிரதாப் சி ரெட்டி இதனை நடத்தி வருகிறார்.
அப்போலோவில் சிகிச்சை பெறுவது என்றால் பெரிய கெளரவமாக பார்க்கப்பட்டது .
அனால் அப்போல்லோ என்றால் இன்று அலறுகிறார்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது உறவினர்களும்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா  அப்போல்லோவில்  75 நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்து கொண்டாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.
மேலும் அந்த 75 நாட்களும் மிகுந்த மர்மமாக சிகிச்சை  அளித்தது மக்களிடையே  கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது , மேலும் ஜெயலலிதா முதலமைச்சர் என்பதால் கடுமையான கெடுபிடிகள் செய்யப்பட்டது.
இதனால் அங்கு தங்கி சிகிச்சை பெற்று  வந்த வெளியூர் மற்றும் உள்ளூர் நோயாளிகளும்  அவர்களது உறவினர்களும்  பாதிக்கப்பட்டனர்.
இப்பிரச்சனைகளால் அப்போல்லோவின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டது .
இதனை சமாளிக்க மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பிரபல நாளேடுகளில் விளம்பரம் செய்யப்பட்டது
அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து சென்டிமென்ட்டாகவும் சிலர் அப்போலோவை தவிர்ப்பதாக தெரிகிறது.  உச்சத்தில் இருந்த அப்போலோ தற்போது ப்ரோக்கர்களை நாடி இழந்த மார்க்கெட்டை பிடிக்க போராடுகிரதாம்.
ஆனால் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட புதிய மருத்துவமனையான காவேரி ஹாஸ்பிட்டலுக்கோ மவுசு கூடிவிட்டது.
கருணாநிதி குணமான இந்த சந்தர்ப்பத்தை அந்த மருத்துவமனை சரியாக பயன்படுத்தி கொண்டுள்ளது.
பேஸ்புக் போன்ற சமூக வலைதலங்களில் கொடுக்கப்பட்ட விளம்பரங்களுக்கு லைக்குகள் அள்ளி குவிகின்றன.
எது எப்படியோ விஐபிகளோ சாதாரண மக்களோ நல்ல படியாக குணமாகி வந்தால் சரி..!!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval