Thursday, December 1, 2016

நல்ல நட்பை இழந்துவிட்டோம்!' மாணவர்களை கலங்கச் செய்த ஷிரிஷின் மர்ம மரணம்

மரணம் இரவு நேரத்தில் பாக்கெட் ஸ்நாக்ஸ் சாப்பிட்ட பிளஸ் டூ மாணவன், திடீர் மரணம் அடைந்ததாக பரவிய செய்தியால் சென்னையில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. சென்னை அடையார் காந்திநகரில் உள்ள செயின்ட் மைக்கேல் பள்ளியில் பிளஸ்டூ வணிகவியல் பாடப்பிரிவில் படித்துவந்தவர் ஷிரிஷ் ஸாவியோ. இவரின் திடீர் மரணம் பெற்றோர் மற்றும் பள்ளி மாணவர்களை தீராத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
குர்குரே காரணமா?
ஷிரிஷ்  குர்குரேவையும், அசிடிட்டிக்காக அருந்தப்படும் இனோவையும் சேர்த்து சாப்பிட்டதால் தான் மரணித்தார் என்றும்,  கல்விச்சூழல் குறித்த மன அழுத்தத்தால் மரணித்தார் என்றும் சமூக ஊடகங்களில் நேற்று இரவு முழுவதும் வெவ்வேறு செய்திகள் உலவின. என்னதான் நிகழ்ந்தது? என்று அறிய இன்று  ஷிரிஷ் வீட்டுக்கும், பள்ளிக்கும் சென்றோம்...   இந்திரா நகர் 16-வது குறுக்குத் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஷிரிஷ் வீடு உள்ளது. அந்த வீட்டு முன்பு உறவினர்கள் மற்றும் அவரின் வகுப்பு மாணவர்கள் நிறைய பேர் திரண்டிருந்தனர். அவர்களிடம் பேச முயன்றோம். ஷிரிஷின் மாமா என்று நம்மிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் எடுத்த எடுப்பிலேயே, "சார் நாங்க யாரும் இப்போது பேசுகிற மன நிலையில் இல்லை. திடீரென்றுதான் அவன் இறந்துவிட்டான். ஆனால் உண்மை என்னவென்று தெரிவதற்குள்ளாகவே வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ல 'குர்க்குரே' சாப்பிட்டுத்தான் ஷிரிஷ் இறந்தான் என்று தகவல் பரவியது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. அந்த மாதிரி தகவல் யார் பரப்பினார்கள்? என்று தெரியவில்லை" என்றார் சோகமாய். 
'சரிங்க சார் அப்போ உண்மையான காரணம்தான் என்னவென்று கேட்டோம்'. அதற்கு அவர் 'சார் நாங்க எதுவும் இப்போதைக்கு சொல்கிற நிலைமையில இல்லை" என்றார் சுருக்கமாக. மலர் மருத்துவமனை வட்டாரத்தில் ஷிரிஷ் மரணம் குறித்து விசாரித்தபோது, "சிகிச்சைக்கு வரும் முன்பே ஷிரிஷ் மரணம் நிகழ்ந்துள்ளது. அதனைப் பெற்றோரிடம் தெரிவித்த உடனே உடலை அவர்களிடம் ஒப்படைத்து விட்டோம். அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை" என்றனர். ஷிரிஷ் மரணம் பற்றி போலீசில் எந்தப் புகாரும் பதிவாகவில்லை என்றும் தெரிகிறது.             
ண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மாணவர்கள்! 
    
ஷிரிஷ் உடல் இந்திரா நகரில் உள்ள அவரின் வீட்டில் இருந்து பெசன்ட் நகர் சர்ச்சுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரோமன் கத்தோலிக்க முறைப்படி இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. பின்னர், உறவினர்கள், செயின்ட் மைக்கேல் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், ஷிரிஷ் வகுப்பு மாணவ, மாணவிகள் என்று ஏராளமானோர் அவரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இறுதிப் பிரார்த்தனை முடிந்த பிறகு ஷிரிஷ் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
 நல்ல நட்பை இழந்துவிட்டேன்! 
தேவாலய வாசலில் எல்லோரும் சென்ற பின்பும் ஒரு மாணவன் அழுதபடி நின்று இருந்தார். அவரிடம் விசாரித்தோம். அந்த மாணவன் பேசுகையில், "என்கூட 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் உடன் படித்தவன் ஷிரிஷ்.படிப்பில் சுட்டியாக இருப்பான்.10-ம் வகுப்புக்குப் பிறகு அவன் வேறு பாடம் எடுத்ததால் நாங்கள் வகுப்பு அளவில் பிரிந்து விட்டோம்.ஆனால் பள்ளியில் எப்போதும் நாங்கள் இணைபிரியாத நண்பர்கள். காமர்ஸ் பாடத்தில் நல்ல மார்க்ஸ் எடுத்து சி.ஏ. படிக்கணும்,பேர் வாங்கணும் என்று கனவு வைத்திருந்தான்.கம்பியூட்டர் கேம்ஸ் நிறைய ஆடுவான். அவனை அதுல ஜெயிக்கவே முடியாது. கிரிக்கெட் மீதும் ஆர்வம் அதிகம். சச்சினின் ஃபேன். ஆனால், திடீர்னு இப்படி இறந்துட்டான்.
29-ம் தேதி நைட் 10 மணி இருக்குமாம் சார். பசிக்குதுன்னு குர்க்குரே சாப்பிட்ட்டு பெப்சி குடிச்சிக்கான். பின்னர் ஜீரணம் ஆகல என்று அவங்க அம்மா கிட்ட சொல்லி இருக்கான். அதற்குப் பிறகு ஈனோ கலந்து குடிச்சிருக்கான். சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளான். உடனே அவன் அப்பா, அம்மா மருத்துவமனைக்கு கொண்டு போயிருக்காங்க. ஆனா, அவனைக் காப்பாத்த முடியல. நல்ல ஃப்ரெண்ட்... இழந்துட்டோம்!" என்றார் கண்ணீர் வழிய. 
        
ஷிரிஷ் ஸாவியோவின் அப்பா சதீஷ் ஒரு வணிகர். அவரின் அம்மா சுஜாதா. தனியார் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். ஷிரிஷ், அவர்களின் ஒரே மகன். மகனை இழந்து வாடும் அவர்களுக்கு என்ன ஆறுதல் வார்த்தைகள் சொன்னாலும் போதாது... ஆனால், அதே நேரம் ஷிரிஷின் மரணம் குறித்து அவரது பெற்றோர் வெளிப்படையாக பேசினால்... வருங்காலத்தில் இதுபோல இன்னொரு மரணம் நிகழாமல் இருக்கும
coutesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval