புதுடெல்லிஎல்லைக்காவல் படைக்கு ஆள் சேர்ப்பது பற்றி தென்இந்தியாவில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்று அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் கூறினார்.எல்லைக்காவல் படை ஆண்டு விழா
பி.எஸ்.எப். எனப்படும் எல்லை பாதுகாப்பு படைப்பிரிவைப் போல் ‘சஷத்ர சீமா பல்’ (எஸ்.எஸ்.பி) என்ற படைப்பிரிவும் எல்லைக் காவலில் ஈடுபட்டு உள்ளது. சீன ராணுவத்தின் ஊடுருவலை தடுப்பதற்காக 1963–ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படைப்பிரிவினர் இந்திய–நேபாள எல்லையிலும், இந்திய–பூடான் எல்லையிலும் காவல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.இந்த படைப்பிரிவின் ஆண்டு விழா டெல்லி கிட்டோர்னி தளத்தில் நேற்று தொடங்கியது. 21–ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.அர்ச்சனா ராமசுந்தரம்
தொடக்க விழாவையொட்டி நேற்று காலை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. இதில் எல்லைக்காவல் படைப்பிரிவின் தலைவர் அர்ச்சனா ராமசுந்தரம் கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–விழிப்புணர்வு முகாம்கள்
எல்லைக்காவல் படையில் பெண்கள் படைப்பிரிவும் உள்ளது. காவல் பணியிடங்களில் பெண்களுக்கு பல அசவுகரியங்கள் உள்ளன. பெண் காவலர்களுக்கு கழிப்பிட வசதி கட்டாயம் தேவை. மாநில அரசுகள் அதற்கான வசதிகளை செய்து தர வேண்டும். எல்லைப் பகுதியில் மின்சாரம் இல்லாத இடங்களில்கூட கழிவறை வசதி உள்ளிட்ட வசதிகளை நாங்கள் ஏற்படுத்துகிறோம்.எல்லைக்காவல் படையில் 17 ஆயிரத்து 724 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் விளையாட்டுப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் தென் இந்தியாவில் உள்ளவர்களின் பங்கேற்பு குறைவாக உள்ளது. எனவே இந்த படைப்பிரிவுக்கு ஆள் சேர்ப்பது பற்றி தென் இந்தியாவில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.ஆண்டுவிழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொள்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.
--தினத்தந்தி
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval