ஆம்பூர்: நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய ஆம்பூர் பெண் தியாகி கோவிந்தம்மாள் காலமானார். சிங்கப்பூரில் தந்தையுடன் தங்கியிருந்த போது நேதாஜியின் கருத்துக்களால் இந்திய தேசிய ராணுவ படையில் சேர்ந்து பணியாற்றியவர் கோவிந்தம்மாள். வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள மகளின் வீட்டில் அவர் இறந்தார். விடுதலை போராட்டத்திற்காக நேதாஜியிடம் சிங்கப்பூரில் உள்ள தன்னுடைய நிலத்தையும், நகைகளையும் வழங்கியவர் கோவிந்தம்மாள் என அவரது மகள் கூறினார்.
மறைந்த தியாகி கோவிந்தம்மாள் உடலுக்கு ஆம்பூரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாட்டின் விடுதலைக்காக தன்னுடைய சொத்துக்களை வழங்கிய தியாகி கோவிந்தம்மாள் கடைசி காலத்தில் அரசு தனக்கு வீடு கட்டி தர வேண்டும் என விடுத்த வேண்டுகோள் மட்டும் கடைசி வரை நிறைவேறவில்லை என்பது சோகம் என்று ஆம்பூர் மக்கள் கூறியுள்ளனர்.
courtesy;Dinakaran
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval