Sunday, December 18, 2016

பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே உள்ள உறவு


Image result for chennai police imagesசென்னை,தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–காவல் நிலையங்களுக்கு வருகை தரும் மனுதாரர்களை வரவேற்று அவர்களின் குறைகளை களைய சட்டப்படியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை பொறுத்தே அவர்களுக்கு காவல்துறையின் மீது நல்லெண்ணம் ஏற்படுகிறது.எனவே பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே உள்ள உறவை மேம்படுத்த காவல் நிலைய வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டு, முதல் பகுதியாக 1,007 பெண் காவலர்கள் உள்பட 2 ஆயிரத்து 640 காவலர்களுக்கு சென்னை காவல் பயிற்சி கல்லூரியின் மூலம் ஒவ்வொரு மாவட்ட–மாநகர தலைமையகங்களில் 16, 17 ஆகிய தேதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.காவல் நிலையங்களுக்கு வரும் மனுதாரர்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களுடைய குறைகளை பொறுமையாக கேட்டறிவதற்கான பயிற்சி இந்த வரவேற்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள் நேரடியாக நிலைய வரவேற்பாளர்களை அணுகுவதன் மூலம் அவர்கள் காவல் நிலையங்களில் செலவிடும் நேரம் குறையும்.பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு நிவாரணம் தேடி காவல் நிலையங்களுக்கு செல்லும் போது, காவலர்கள் உடனடியாக செயல்பட்டு தங்கள் குறைகளை களைவதில்லை என்று நிலவி வரும் பொதுவான கருத்து இந்த நடைமுறையினால் அகலும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


--தினத்தந்தி

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval