சேலம் அருகே சமையல் பாத்திரத்தில் சிறுமியின் உடல் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நரபலிக்காக நடந்த கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தெளுங்கனூரை சேர்ந்த ராஜாவின் 8 வயது மகள் மோகனவள்ளி நேற்றிரவு வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது திடீர் என காணாமல் போனார்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அருகில் இருந்த திருமூர்த்தி என்பவரது வீட்டின் அருகே நின்றதாகவும் அதன் பிறகே காணாமல் போனதாகவும் தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் திருமூர்த்தியின் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது அங்கு பெரிய பாத்திரம் ஒன்றில் சிறுமி மோகன வள்ளி பிணமாக கிடந்தார்.
இதையடுத்து, திருமூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாத்திரத்தை சுற்றிலும் சிவப்பு நிறத்தில் குங்குமம் சிதறி கிடந்ததால் நரபலிக்காக நடந்த கொலையா அல்லது சிறுமி பாலியல் தொந்தரவிற்கு உட்படுத்தப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval