Thursday, July 7, 2016

இரத்தசோகையை கண்டறிவது எப்படி?

இரத்தசோகையை கண்டறிவது எப்படி?
இரத்தசோகையின் மிகப்பெரிய பொதுவான காரணம், இரும்புச்சத்து குறைபாடு. அவ்வாறு குறைபாடு ஏற்படும் பொழுது நம் உடலில் இரத்த சோகை ஏற்படுகிறது.
படி ஏறும் போது மூச்சுத்திணறலா? மண், பலப்பம், விபூதி போன்றவை சாப்பிட ஆசையாக உள்ளதா? எப்பொழுதும் சோர்வாகவே இருக்கிறீர்காளா? இந்த கேள்விகளுக்கு ஆம் என்று பதிலளித்தால் நீங்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யலாம்.

இரத்தசோகையின் மிகப்பெரிய பொதுவான காரணம், இரும்புச்சத்து குறைபாடு. அவ்வாறு குறைபாடு ஏற்படும் பொழுது நம் உடலில் இரத்த சோகை ஏற்படுகிறது.

உணவில் இரும்புச்சத்து குறைபாடு, வலி நிவாரணிகள், குடற்புண், பெருங்குடல், புற்று நோய் போன்ற காரணிகளால் நாள்பட்ட இரத்த இழப்பு ஏற்படுவது முக்கிய காரணமாக உள்ளது.

பெண்களுக்கு மாதவிடாய், கர்ப்பம் போன்றவை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள், அசைவ உணவைத் தவிர்ப்பது போன்றவை ஒரு சில காரணங்கள்.

நாள்பட்ட இரத்தசோகை கடுமையான இருதய நோய், குழந்தைகளில் வளர்ச்சி குறைபாடு, கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் குறைப்பாடுகள் என பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
courtesy'malai malar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval