Tuesday, July 12, 2016

நெல்லை அருகே ஓடும் பேருந்தில் அண்ணன் - தம்பி வெட்டிப் படுகொலை!


நெல்லை அருகே ஓடும் பேருந்தில் அண்ணன் - தம்பி வெட்டிப்  படுகொலை!நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அண்ணன், தம்பி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திருப்புடைமருதூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணப்பன் என்பவருக்கும் நிலத் தகராறு இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி கண்ணப்பன் வெட்டி கொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாரியப்பன், ஜாமின் பெற்று சேரன்மாதேவி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். இந்நிலையில், மாரியப்பன் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி விட்டு, சகோதரர் சுப்பிரமணியுடன் கல்லிடைக்குறிச்சிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். 

அந்த பேருந்து வீரவநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது, பேருந்தை தொடர்ந்து வந்த கும்பல் மாரியப்பன் மற்றும் சுப்பிரமணியை சரமாரியாக வெட்டியது. இதில் சுப்பிரமணியன் ரத்த வெள்ளத்தில் பேருந்திற்குள்ளேயே உயிரிழந்தார். 

தப்பி ஓட முயன்ற மாரியப்பனை சுற்றி வளைத்த கும்பல் அவரையும் வெட்டி சாய்த்தது. இதில் அவரும் உயிரிழந்தார். இரட்டைக் கொலை சம்பவத்தால், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

வீரவநல்லூர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். 
courtesy;News 7Tamil

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval