Tuesday, July 26, 2016

மழை,வெள்ளத்தால் திணறும் சீனா: 600 பேர் நிலை என்ன?

தென் சீனாவில் உள்ள பல மாகாணங்கள் பருவ மழை மற்றும் வெள்ளப் பெருக்கத்தின் தாக்கத்தை சமாளிக்க கடுமையாக திணறி வருகின்றன. சமீபத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கிட்டத்தட்ட 600 பேர் உயிரிழந்தும் அல்லது காணாமலும் போயுள்ளனர்.
span>
சமீப நாட்களில், அடைமழை தலைநகர் பெய்ஜிங்கை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மான்செஸ்டர் யுனைடட் மற்றும் மான்செஸ்டர் சிட்டி ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கால்பந்து ஆட்டத்தை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது..

Image copyrightGETTY IMAGES

நகரில் உள்ள வெள்ளம் இல்லாத பகுதிகளில் வரலாற்று சிறப்புமிக்க தி ஃபர்பிடன் நகரமும் ஒன்று.
சீனப் பேரரசர் முன்னர் பயன்படுத்திய 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையில் அதிநவீன வடிகால் அமைப்பு ஒன்றுள்ளது.
அதன் காரணமாக அங்கு வெள்ளம் சூழவில்லை. சுற்றுலா பயணிகளுக்காக தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது.
courtesy;B B C Tamil

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval