வேலூர் மாவட்டம் ஆம்பூரில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பள்ளியில் பிறந்த நாள் விழா கொண்டாடிய போது மது அருந்தியதாக புகார் எழுந்துள்ளது.
அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் மது அருந்தி வகுப்பிலேயே வாந்தி எடுத்துள்ளனர். மாணவர்களின் பொற்றோருக்கு தகவல் தெரிவித்த தலைமை ஆசிரியர், மாணவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
பல மாதங்களுக்கு முன்பு, பள்ளி மாணவர்களும், மாணவிகள் சிலரும் மது அருந்தியதாக புகார் எழுந்த நிலையில், தற்போது மீண்டும், மாணவர்கள் மதுவிற்க அடிமையாகியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு, பெற்றோர் மற்றும் பொது மக்களையும், சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது
courtesy'puthiyathalaimurai
courtesy'puthiyathalaimurai
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval