Friday, July 15, 2016

மாணவிகளே ப்ளீஸ் உஷாரா இருங்க......

Image result for girl students image in indiaபெற்றோரின் மனதையும் கஷ்டத்தையும் புரிந்துக் கொண்டு வாழ்க்கையில் பாதுகாப்புடன் முன்னேற முயலுங்கள்
மாணவ மாணவிகளே,
ஸ்வாதி கொலை போன்ற எவ்வளவோ நிகழ்ச்சிகள் அன்றாடம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன... அதை நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்....
ஆனால், மாணவிகளே உங்களிடம் சிறிதளவு கூட மாற்றம் இல்லை....
இன்று காலையில 8.25 மணிக்கு சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பலரையும் அதாவது படித்து முடித்து பொறுப்புடன் வேலைக்கு செல்லும் அனைவரையும் முகம் சுளிக்க வைத்த நிகழ்ச்சி...
செல்லம்மாள் கல்லூரிக்கு செல்லும் சில மாணவிகளும்.. அண்ணா பல்கலைகழகத்திற்கு செல்பவர்களும் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி போவது வழக்கம்.
நடை மேடையில் தாம்பரம் செல்லும் பக்கம் 5, 6 மாணவர்களை கொண்ட கூட்டம் ( அவர்களுள் ஒரு பெண்ணும்(மாணவி) அடக்கம். ... கடற்கரை செல்லும் பக்கம் 5, 6 மாணவிகளை கொண்ட 3 பிரிவுகளாக தனி தனி கூட்டம்.
மாணவிகள் கூட்டம் குழு குழுவாக வெளியேறினர்... 3 குழுக்களிலிருந்து ஒவ்வொரு மாணவி வீதமாக 3 மாணவிகள் சொல்லி வைத்தாற் போல்.. அமர்ந்திருந்த என்னை கடந்து செல்லும் போது தங்கள் தோழிகளிடம் அவந்தான்டி அவந்தான்டி என்று அந்த மாணவர் கூட்டத்திலிருந்து ஒரு குறிபிட்ட மாணவனை காட்டி வெட்கத்துடன் சிரிதுக் கொண்டே அவனை பார்த்துக் கொண்டே ( திரும்பி திரும்பி) ஜாடை காட்டிக் கொண்டும் சென்றனர்.
அதன் பிறகு படி இறங்கும் வழியாகவும்...அந்த 3 மாணவிகளும் அந்த மாணவனை பார்த்து பை சொல்லும் விதமாக கை அசைத்து சென்றனர்.
அதற்கு அந்த மாணவர்கள் பேசிக் கொண்டது என்னவென்றால்... மச்சி.... மூணும் உனக்கு கைய காட்டுதுடா.... எத பிக் அப் பண்ண போறே... போடா மச்சி மூணும் சுமார் தான் இதெல்லாம் டைம் பாஸ் லவ்... என் ரேஞ்ச்சே வேற....
அதுக்கு அந்த குழுவிலிருந்த பெண் மாணவி கேட்ட கேள்வி தான் மிக்க அதிர்ச்சிகுள்ளானது.. அவள் அந்த மாணவனிடம்.. அதல்லாம் சரிடா இந்த மூணு பேர்ல நான் நாளைக்கு யார்கிட்ட ஃப்ரெண்ட் ஆகி கரெக்ட் பண்ணனும்...
சத்தியமா நம் மாணவ சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று புரியவில்லை...
மாணவிகளே ப்ளீஸ் உஷாரா இருங்க...
courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval