ஒரு #மாணவன் தனது தேர்வு ஒன்றில்..
முட்டை மதிப்பெண் கிடைத்ததால்
பெரும் அதிர்ச்சி ஆனான்..!
காரணம்
அவன் அனைத்து கேள்விகளுக்கும்..
சரியாக பதிலளித்திருப்ப
தாகவே நம்பினான்..!
ஆனபோதும் அவை அனைத்தும்..
தவறு என
அவனது விடைத்தாளை திருத்தியவர்..
தெரிவித்தார்..!
ஆனால் தாம் மிகச் சரியான
பதிலை எழுதியதாகவே.. அந்த
மாணவன்
தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்..
வாதாடினான்..!
சரி.. அப்படி என்ன தான்
கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என
பார்ப்போம்..!
____________________________________________
1.கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான்
உயிரிழந்தார்..?
பதில்;- அவரது கடைசி போரில்..!
2 .கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான..
பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது..?.
பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..!
3.கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில்..
வாழை மரங்கள் எதற்காக
கட்டப்படுகிறது..?
பதில்;- அவைகள் கீழே விழாமல்
இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..!
4.கேள்வி;- விவாகரத்திற்கான.. முக்கிய
காரணம் என்ன..?
பதில்;- திருமணம் தான்..!
5.கேள்வி;- இரவு- பகல்..
எவ்வாறு ஏற்படுகிறது..?
பதில்;- கிழக்கே உதித்த சூரியன்..
மேற்கில் மறைவதாலும்.. மேற்கில்
மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில்..
உதிப்பதாலும் இரவு- பகல்
ஏற்படுகிறது..!
6. கேள்வி;- மகாத்மா காந்தி..
எப்போது பிறந்தார்..?
பதில்;- அவரது பிறந்த நாளன்று..!
7.கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதா..?
பதில்;- இல்லை.. திருமணங்கள்
செய்யும் அவரவர் வீட்டில்..!
8.கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார்
கட்டினார்..?
பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக..
கொத்தனார்களால் கட்டப்பட்டது..!
9கேள்வி;- 8மாம்பழங்களை.. 6
பேருக்கு எப்படி சரியாக
பிரித்து கொடுப்பது..?
பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில்
சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!
//மாணவன் சரியாக
தானே பதிலளித்துள்ளான்..????
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval