Wednesday, July 6, 2016

கூந்தல் உதிர்வதை தடுக்கும் கொய்யா


கூந்தல் உதிர்வதை தடுக்கும் கொய்யாகொய்யா இலை சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. எல்லாவித விட்டமின்களும் உண்டு. இது கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தி முடியில் கணுக்கால்களை வலுவாக்கும்.


கொய்யாவில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ளது. இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது. சரும பாதிப்பை ரிப்பேர் செய்கிறது. கூந்தலுக்கு மிளிரும் தன்மையைத் தரும்.

கை நிறைய கொய்யா இலைகளை எடுத்து, ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வையுங்கள். 20 நிமிடங்கள் கழித்து, வடிகட்டி, அந்த நீரில் தலைமுடியை நனையுங்கள். குறிப்பாக ஸ்கால்ப்பில் தடவுங்கள். 5 நிமிடம் மசாஜ் செய்து பின்னர் தலையை அலசுங்கள். இவ்வாறு செய்வதனால், முடி உதிர்வதை தடுக்க முடியும்.

கொய்யா இலையை பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆலிவ் எண்ணெய் தேங்காய் எண்ணெயை சம அளவு எடுத்து, அடுப்பில் சூடேற்றுங்கள். எண்ணெய் கொதித்ததும், அடுப்பை குறைத்து, கொய்யா இலை பேஸ்ட்டை அதில் போடுங்கள். ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும் அதில் சேர்க்க வேண்டும். நுரை தணிந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

எண்ணெய் ஆறியதும் ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலை வெயிலில் 20 நிமிடம் பாட்டிலை வைக்க வேண்டும். ஒரு வாரம் கழிந்ததும் எண்ணெயை வடிகட்டி அந்த எண்ணெயை உபயோகப்படுத்துங்கள். வாரம் மூன்று முறை இந்த எண்ணெயை தலையில் வேர்கால்களில் அழுந்த தேய்த்து, மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். இவ்வாறு செய்தால், மின்னும் கூந்தல் கிடைக்கும். கூந்தல் மிக மிருதுவாக மாறும். முடி வளர்ச்சியும் அபாரமாக இருக்கும்.

கொய்யா இலை, மருதாணி இலை இரண்டையும் சம அளவு எடுத்து, அரைத்து, தலையில் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து தலை முடியை அலசலாம். இதனால் முடி அடர்த்தியாய் வளரும். கூந்தலுக்கும் ஊட்டச்சத்து கிடைக்கும்.
courtesy;malaimalar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval