Thursday, July 28, 2016

ஹு வாண்ட் டு பி மில்லியனர்

முனீப் அபூ இக்ராம்'s Profile Photo ஹு வாண்ட் டு பி மில்லியனர் என்கிற ஒரு நிகழ்ச்சி அமெரிக்க தொலைக் காட்சி ஒன்றில் நடக்கிறது.
அது தமிழகத்தில் உள்ள நீங்களும் வெல்லாம் ஒரு கோடி நிகழ்ச்சி போன்றது அல்ல. நிச்சயமாக நிறைய பொது அறிவு வேண்டும்.
அதில் ஜான் கார்பெண்டர் என்கிற நபர் ஒரு மில்லியன் டாலரை வென்றார். அவர் எந்த விதமான வாய்ப்புக்களையும் கடைசி வரை பயன்படுத்தாமல் கடைசிக் கேள்விக்கு மட்டும் தன் தந்தையின் உதவியை நாடினார்.
அந்தக் கேள்வி என்னவென்றால்
லாஃப் இன் என்கிற தொடரில் நடித்த அமெரிக்க ஜனாதிபதி யார்? என்பது,
ஜான் கார்பென்டர் தன் தந்தையின் உதவியைக் கோரிய பொழுது, எல்லோரும் எங்கே ஒரு மில்லியனை வெல்லாமல் தோற்று விடுவாரோ என எண்ணிக் கொண்டிருக்கையில், கொடுத்த அரை நிமிடத்தில் தனது தந்தை டாம் கார்பெண்டரிடம்
ஜான்," அப்பா எவ்வாறு உள்ளீர்கள்? எனக்கு கேள்விக்கு விடை தெரியும். ஆனால், நான் ஒரு மில்லியன் வெல்லப் போவதை உங்களிடம் தான் முதலில் சொல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்றாரே பார்க்கலாம்...
தந்தை,
விந்தையான உலகத்தை கற்றுக் கொடுத்தவர். தந்தையைப் போற்றுவோம். எத்துனை பேர் அதைச் செய்கிறோம்?!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval