இன்றைய உணவு நுகர்வு கலாசாரத்தில், மருத்துவச் செலவுக்கென்றே தனியாகச் சம்பாதிக்க வேண்டிய நிலை நிலவுகிறது. அந்த அளவுக்கு நாளொரு மேனி பொழுதொரு நோயும் வரிந்து கட்டி வரத் தொடங்கி விட்டன. ‘சரியான உணவு முறையைப் பின்பற்றி நலமாக வாழலாம்’ என்கிற ஊட்டச்சத்து நிபுணர் சோபியா, அதற்கென கூறும் 5 வழிகள் ஆரோக்கிய வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பது உறுதி.
நெல்லிக்காய்:
கூந்தலை வலுப்படுத்தவும், நன்றாக வளர்வதற்கும் நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது. முடி உதிர்தலை தடுக்கும். ஹார்மோன் பிரச்னையால் ஏற்படும் இளநரையைப் போக்கும். தினமும் நெல்லிக்காய் சாறை குடித்துவர பார்வை திறன் அதிகரிக்கும். கால்சியம் சத்து அதிகரிப்பதால் எலும்பு, பற்கள், நகங்களுக்கு மிகவும் நல்லது.
பாதாம்:
வைட்டமின் இ மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த உணவு. முந்தைய நாள் ஊறவைத்த பாதாமை தோல் உரித்து மறுநாள் சாப்பிடலாம். நாள் ஒன்றுக்கு 3 – 4 பாதாம்களைச் சாப்பிட்டால் நல்ல கொழுப்பின் அளவு சீராக இருக்கும். அன்றைய நாளுக்குத் தேவையான ஆற்றலை தரும். ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
சோயாபீன்
சோயாபீனை தாவர இறைச்சி என்றே சொல்லலாம். இதில், புரதச் சத்து அதிகம். கொழுப்பின் அளவை குறைத்து வளர்ச்சிதை மாற்றப் பணிகளை மேம்படுத்தும். அதே நேரத்தில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் குறைக்கும்.
எலுமிச்சை
தினமும் எலுமிச்சைச் சாறு குடித்துவந்தால் வைட்டமின் சி தேவையைப் பூர்த்தி செய்யும். எலும்பை வலுவாக்கும். உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். உடல் புத்துணர்ச்சி அடையும். சளி, சளி தொடர்பான காய்ச்சல் போன்றவற்றுக்கு எலுமிச்சைச் சாறை அருந்தலாம். இதனால் சளி குணமாகுமே தவிர அதிகரிக்காது.
பூண்டு
அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் பொருள் இது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். இதில் உள்ள அலிசின் உயர் ரத்த அழுத்தத்தைத் தகுந்த அளவில் குறைக்கிறது. கல்லீரலில் கொழுப்புப் படிவத்தைத் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval