Tuesday, January 27, 2015

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்


இன்று அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் கடும் பனிப்புயல் அடித்து போக்குவரத்து  பாதிக்கப்பட்டது பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது சாலைகளில் பனிக்கொட்டி கிடப்பதை புகைப்படத்தில் காணுங்கள் 
பனிப்புயல் குறித்து பேசிய நியூயோர்க் மேயர் Bill de Blasio, இது நியூயோர்க் வரலாற்றில் நிகழாத மோசமான பனிப்புயலாக இருக்கும். பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயனிக்க வேண்டும்.
அலுவலகங்கள் செல்பவர்கள் திங்கள் மற்றும் செவ்வாய் தினங்களில் வீட்டிலிருந்தே அலுவலக பணிகளை செய்யும் வகையில் ஏற்பாடுகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
                    NYC mayor this could be largest snowstorm in New York's history
மேலும், நியூயோர்க் கவர்னர் Andrew Cuomo கூறுகையில், பனிப்புயலை எதிர்கொள்ள அரசு அனைத்து விதமான முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval