Monday, January 12, 2015

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இமெயில் மூலம் வாக்களிக்க ஏற்பாடு!

உச்ச நீதிமன்றம்வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இமெயில் மூலம் வாக்குச் சீட்
டை அனுப்பிவைத்து, வாக்களிக்க ஏதுவான ஏற்பாடுகளை 8 வார காலத்திற்குள்  செய்ய  மத்திய  அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில்  நடைபெறும் தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நேரில்  வாக்களிக்க வேண்டும் என்ற நிலைதான் இருந்து வருகிறது. இதனால் பலரும் வாக்களிக்க இயலாமல் போக நேரிடுகிறது.
இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அஞ்ச
ல் வழியாக  வாக்களிக்கும் வசதி செய்து தரவேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் ஒரு கோடி பேர் அஞ்சல் வழியாக  வாக்களிக்க இயலும். தேர்தல் ஆணையத்தின்  பரிந்துரையின் படி இ-பேலட் வாக்குப்பதிவு முறையை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கான சட்டம் இயற்றப் பட்டதும் , இ-பேலட் மூலம் வாக்களிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கப்படும் என மத்திய அரசு நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது. எனினும் விரைவாக இவ்வசதியை செய்து தரவேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம் 8 வார காலத்திற்குள் இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டது.
இம்முறைப்படி வெளிநாடு வாழ் இந்தியருக்கு இ-மெயில் மூலம் வாக்குச்சீட்டு அனுப்பப்படும். தனக்கு விருப்பமான நபருக்கு வாக்களித்த பின் வாக்குச்சீட்டை அஞ்சல் வழியாக வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்கள் தொகுதிக்கு உரிய முகவரிக்கு அனுப்பவேண்டும் என்றும் தகவல்கள் கூறுகின்றன..

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval