Monday, January 12, 2015

பத்திரிக்கை அலுவலக தாக்குதலுக்கும் பிரான்ஸ் முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை



பத்திரிக்கை அலுவலக தாக்குதலுக்கும் பிரான்ஸ் முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : பிரான்ஸ் அதிபர் பேச்சு....
!!
பிரான்ஸிலுள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கும் பிரான்ஸ் முஸ்லிம்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான விசாரணை சரியான திசையில் சென்றுக் கொண்டிருப்பதாகவும் இது தொடர்பாக யாரும் எவ்வித குழப்பங்களிலும் ஈடுபட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
முகநூல் முஸ்லிம் மீடியா கருத்து :
சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக தாக்குதலை யார் செய்தது என்று முழுமையாக தெரியவில்லை என்றாலும் தண்டிக்கும் உரிமை உலகில் யாருக்கும் வழங்கப்படாததால் இந்த தாக்குதலை முஸ்லிம்களாகிய நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
அதேவேளையில் ஊடகங்களுக்கு என்று ஓர் தர்மம் இருக்கிறது, அந்த தர்மத்தை அவர்கள் காக்க வேண்டும்.
உலகிலேயே சிறந்த 10 தலைவர்களை தேர்வு செய்து அவர்களை கௌரவிக்கும் விதமாக அமெரிக்காவில் சிலை வைத்தார்கள். அந்த 10 சிலைகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஓர் சிலை வைத்தார்கள்.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் போராட்டத்தால் அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்ட்டது.
சார்லி ஹெப்டோ என்ற இந்த பத்திரிக்கை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக யுத்தம் தொடுத்தார்கள்.
அமெரிக்காவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தி வெளியிடப்பட்ட திரைப்படமான இன்னொசன்ஸ் ஆப் முஸ்லிம் படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் கொந்தளித்த நேரத்தில் இந்த பத்திரிக்கை நபிகள் நாயகத்த்திற்கு உருவம் கொடுத்து கேலி சித்திரம் வரைந்து எரிகின்ற தீயில் எண்ணை ஊற்றியது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தி ஒருமுறை இருமுறையல்ல பலமுறை கேலி சித்திரம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
(அவர்கள் வெளியிட்டிருந்த அந்த படத்தின் பிரதியை முகநூல் முஸ்லிம் மீடியாவின் டெலிகிராம் குழுமத்தில் வைத்துள்ளோம். தேவையானவர்கள் அங்கு வந்து பார்வையிடலாம், பார்வையிடுவதற்கு மட்டுமே அனுமதி பரப்புவதற்கு அல்ல)
அதுப்போல் பிரான்ஸ் பெண்களின் புர்கா பிரச்சினைக்கு இந்த பத்திரிக்கை ஓர் முக்கிய காரணம்.
இப்படி தொடர்ச்சியாக இந்த பத்திரிக்கை எல்லை மீறியதால் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரன்ஸ் ஃபேப்யூஸ் பத்திரிக்கையைக் கண்டித்து காட்டமான அறிக்கையையும் வெளியிட்டார்.
இது போன்ற கீழ்த்தரமான செயல்களை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லிப் பார்த்தார்.
அந்த பத்திரிக்கை எதையும் கேட்கும் நிலையில் இல்லை. பத்திரிக்கையின் சீஃப் எடிட்டர் கெரார் பியர்ட் அதற்கு பதிலளிக்கும் போது....
ஒரு பத்திரிக்கையாளனாக எவ்வாறு பிரான்ஸ் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். சட்டத்தை காபூலுக்காகவும், ரியாத்துக்காகவும் வளைத்தால் அதனை நாங்கள் மதிக்க வேண்டியதில்லை என்று திமிராக பதிலளித்தார்.
இப்படி தொடர்ச்சியாக ஒரு சமூகத்திற்கு எதிராக யுத்தம் தொடுத்து வந்ததால் கோபம் கொண்ட இயக்கத்தினர் பதில் தாக்குதல் தொடுத்தார்களா அல்லது இதை யூதர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்களா என்று சரியாக தெரியவில்லை.
யார் செய்திருந்தாலும் ஆயுதம் தூக்குவதை வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கமாகும்.
courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval