Saturday, January 17, 2015

எப்போதுமே நன்மை பயக்கும் ஒரு விஷயம்

இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவர், ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் coldroom அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது.உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்...!! இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப்போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தார் அவர்.
அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உயிர் வந்தவனாய் வெளியே ஓடி வந்தார். தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தான். சந்தோஷத்தில் அவனை கட்டி தழுவிக்கொண்டார்.
அவனிடம் "நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?" என்று கேட்டார்.

"சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்...நீங்க ஒருத்தர் மட்டும் தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும் சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர்.
இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை.உடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்...அப்போதான் உங்கள் கண்டு பிடிச்சேன் ..." என்றான்
ஒருவருக்கொருவர் மற்றவர்களை தரக்குறைவாக எண்ணாமல் பரஸ்பரம் மரியாதை செலுத்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும் ஒரு விஷயம் தானே நண்பர்களே.
courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval