Thursday, January 1, 2015

அடேங்கப்பா!! இதுல இவ்வளோ விஷயம் இருக்கா!!?

Untitled-1 copyகுடைமிளகாய், மிளகாய் என்றாலே எகிரி ஓடுபவர்கள் கூட இதனை வெளுத்து வாங்குவாரகள். இதில் அவ்வளவு காரம் கிடையாது. மேலும் இதில் எக்கச்சக்க மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அதனால் தான் பெரும்பாலான சைனீஸ் உணவுகளில் குடைமிளகாய் இல்லாமல் இருக்காது.
குடைமிளகாயில் குறிப்பாக வைட்டமின் சி, மினரல்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் ஆகியவை அதிகம் உள்ளன. />இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் குடைமிளகாயினால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்…
குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அது ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடண்ட்டாக உள்ளது. இரத்த நாளங்கள், சருமம், எலும்புகள் ஆகியவை சீராகச் செயல்பட இது உதவுகிறது. ஸ்கார்வி என்னும் நோயைத் தவிர்க்கின்றது.
குடைமிளகாயில் கலோரிகள் குறைவாக இருப்பதால், அது கொழுப்பை நன்றாகக் குறைக்கிறது. செரிமானப் பிரச்சனைகளுக்கு குடைமிளகாய் மிகவும் நல்லது. வயிற்று வலி, வாயுத் தொல்லை, வயிற்றுப் போக்கு ஆகியவற்றுக்கும் இது ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது குடைமிளகாய்.இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொழுப்பின் அளவுகளும் அதிகரிக்காமல் இருக்கும்.
குடைமிளகாயில் உள்ள கேயீன் என்னும் வேதிப் பொருள், பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது. இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்து இதய ஆரோக்கியத்தை குடைமிளகாய் அதிகப்படுத்துகிறது. இதய அடைப்பினால் தவிப்பவர்களுக்கும் இது ஒரு நல்ல மருந்தாகும்.
குடைமிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற கூட்டுப் பொருள், சருமத்திலிருந்து முதுகெலும்பிற்குச் செல்லும் வலி சிக்னலைத் தடுக்கிறது.


மேலும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதிலும் குடைமிளகாய் வல்லது.அட குடைமிளகாய்ல இவ்வளோ மேட்டர் இருக்கா?? இனி டெய்லி ஃப்ரை பண்ணிவிட வேண்டியதுதான்..!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval