1.அமெரிக்க ராணுவம் மத்திய கிழக்கு மக்கள் மீது தொடுத்த போரினால் 15 பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டது என்பது சாதாரண செய்தி அல்ல..உலக கருத்துப்போராளிகள் கருத்து சொல்ல முன் வரவில்லை
3. 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இராக் நாட்டில் ராய்டரின் பத்திரிக்கை பணியில் ஈடுபட்ட புகைப்பட பணியாளர்கள் நமிர் நூர்-எல்தீன் மற்றும் ஓட்டுனர் சயித் சமாஹ் ஆகிய இருவரும் கொல்லப்பட்டது குறித்துஉலகம் கண்டு கொள்ள வில்லை
4.அந்த இரண்டு நபர்களுமே கிழக்கு பாக்தாத்தில் வேலைக்குப் பொறுப்பேற்றிருந்த போது,அமெரிக்க அப்பாச்சி துப்பாக்கி தாங்கிய விமானங்களால் திட்டமிட்டு குறி வைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
5.ஒரு அமெரிக்க சிப்பாய் கோப்ரல் பிராட்லி செல்சியா மானிங்கிடமிருந்து பெறப்பட்ட இரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டதன் விளைவாக இரண்டு பத்திரிக்கையாளர்களும் ஒரு இராக்கிய குழுவினர் கொலை செய்யப்பட்டனர் ..
6.இதனை காட்சி ஆக்கப்பட்ட வீடியோ துப்பாக்கி ஏந்திய விமானத்தில் ஆவணமாக கிடைத்தது ...அது குறித்து அமெரிக்காவும் உலக நாடுகளும் பெரிதாக வாய் திறக்க வில்லை ..
7.விக்கி லீக்ஸ் பத்திரிக்கையாளர் ஜூலியன் அஸான்ஜ் அமெரிக்கா குறித்த பல திடுக்கிடும் செய்திகளை உலகிற்கு துணிச்சலாக தந்தவர் ..
8.அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அவரை கடுமையான விசாரணைக்கு உட்படுத்தினர்
9.கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள அரசியல் மற்றும் ஊடக பிரபலங்கள் அவரை பயங்கரவாதி என்று முத்திரை குத்தி கொலை செய்யப் படவேண்டும் என கொக்கரித்தனர்.
10அமெரிக்க மற்றும் ஸ்வீடன் உளவுத்துறை சேவைகளால் ஜோடிக்கப்பட்ட மோசடி "கற்பழிப்பு" வழக்குகளில் இன்னும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றார் ..
11.மேலும் அவர் லண்டன் நகரில் ஈக்வடார் தூதரகத்தில் நாடு கடத்தப்பட்ட நிலையில் இருக்கின்றார் ..
12.செல்சியா மானிங் என்ற பத்திரிக்கையாளர் தேசத்துரோக குற்றத்திற்காக 35ஆண்டுகள் தண்டனை பெற்று, தற்போது சிறையில் உள்ளார்.
பத்திரிக்கையாளர்களை காவு கொடுக்கும் அதிபர்கள்:
*******************************************************************************
1.இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாலஸ்தீனை ஊடகங்களை அடக்கியும் ஊடகவியலாளர் பலரையும் கொண்டு குவித்தது உலகம் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை ..2014 ஆம் ஆண்டில் காஸாவிற்கு எதிரான தாக்குதலில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் எண்ணிக்கை 17
*******************************************************************************
1.இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாலஸ்தீனை ஊடகங்களை அடக்கியும் ஊடகவியலாளர் பலரையும் கொண்டு குவித்தது உலகம் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை ..2014 ஆம் ஆண்டில் காஸாவிற்கு எதிரான தாக்குதலில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் எண்ணிக்கை 17
2.எகிப்திய வெளியுறவு மந்திரி சமெஹ் சௌக்ரி, இவரது ஆட்சி ஆயிரக் கணக்கானவர்களை படுகொலை செய்துள்ளது; பத்து ஆயிரக் கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்களை சிறையில் அடைத்துள்ளது..
3.ஜோர்டான் அரசர் தனது முடியாட்சியை விமர்சித்த குற்றத்திற்காக ஒரு எழுத்தாளரை 15 ஆண்டுகள் சிறைக்கு அனுப்பி இருந்தார்
4.துருக்கிய பிரதம மந்திரி அஹ்மெட் தாவ்டோக் அவரது ஆட்சியில் அதிகமாக சிறையில் இருப்பவர்கள் பத்திரிக்கையாளர்கள் என்ற செய்திகளும் வெளிவந்து இருக்கின்றது
5.பிரான்சுக்கான சவூதி அரேபிய தூதர் மொஹம்மது இஸ்மாயில் அல்-ஷேக் ஆவார் .அரசு-உதவிபெறும் வாஹ்ஹாபி இஸ்லாம் பள்ளியை அவமதித்தார் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒரு வலைப்பதிவர் ரஃபி பதாவிக்கு 1,000 கசையடி தண்டனையும்—அதில் 50 வெள்ளிக்கிழமை அன்று தான் வழங்கப்பட்டது—மற்றும் 10 ஆண்டுகால சிறை தண்டனை
என சர்வாதிகார முடி ஆட்சியை விஞ்சும் அளவிற்கு கொடுமைகள் தொடர்கின்றன ..
என சர்வாதிகார முடி ஆட்சியை விஞ்சும் அளவிற்கு கொடுமைகள் தொடர்கின்றன ..
பத்திரிக்கையாளர்களை காவு கொடுக்கும் நாடுகள்:
**************************************************************************
1.கடந்த 10 ஆண்டுகளில் இராக்கில் மட்டும் 100 ஜர்னலிஸ்ட்கள் கொல்லப்பட்டு பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படும் நாடுகளில் இராக் முதல் இடத்தை பெறுகின்றது ...சோமாலியா நாடு இரண்டாம் இடத்தையும், பிலிப்பைன்ஸ் மூன்றாம் இடத்தையும் பெறுகின்றது .....
**************************************************************************
1.கடந்த 10 ஆண்டுகளில் இராக்கில் மட்டும் 100 ஜர்னலிஸ்ட்கள் கொல்லப்பட்டு பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படும் நாடுகளில் இராக் முதல் இடத்தை பெறுகின்றது ...சோமாலியா நாடு இரண்டாம் இடத்தையும், பிலிப்பைன்ஸ் மூன்றாம் இடத்தையும் பெறுகின்றது .....
2.ஸ்ரீலங்கா நாட்டில் அதிகமான பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுவதும் அடக்கப்படுவதும் தொடந்து வருகின்றது .அதிகமான பத்திரிக்கையாளர்கள் புலம் பெயர்ந்து செல்லும் அவலமும் தொடர்ந்து வரும் நிலையில் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படும் நாடுகளில்ஸ்ரீலங்கா நாடு நான்காம் இடத்தில் இருக்கின்றது ..
3.சிரியா, நைஜீரியா, பாலஸ்தீனம், மற்றும் பல நாடுகளும் இதன் வரிசையில் அடங்கும்
4.நியூ யார்க் நகரை களமாக கொண்டு செயல்படும் CPJ குழு இந்த செய்திகளை வெளியிடுவது கவனிக்க வேண்டிய ஓன்று
இஸ்ரேலால் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பலஸ்தீனில்
படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களின் விவரம்:
************************************************************************************
1. ஹமித் அப்துல்லாஹ் ஷிஹாப் – மீடியா24 நிறுவனம்(Media 24)
படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களின் விவரம்:
************************************************************************************
1. ஹமித் அப்துல்லாஹ் ஷிஹாப் – மீடியா24 நிறுவனம்(Media 24)
2. நஜ்லா மஹ்மூத் ஹஜ் – சுதந்திர செய்தியாளர்
3. காலித் ஹமத் – கொண்ட்னாவோ ஊடக தயாரிப்பு நிறுவனம் (The Kontnao Media Production company)
4. ஸியாத் அப்துல் ரஹ்மான் அபு ஹின் – அல் கெதப் செயற்கைகோள் அலைவரிசை(Al-Ketab satellite channel)
5. இஸ்ஸத் துஹைர் – சிறைவாசிகள் வானொலி(Prisoners Radio)
6. பஹாவுதீன் கரிப் – பலஸ்தீன் தொலைகாட்சி(Palestine TV)
7. அஹத் ஸக்கூத் – விளையாட்டுதுறை செய்தியாளர்(Veteran Sports Journalist)
8. ரயான் ரமி – பலஸ்தீன் ஊடக வலைப்பின்னல்(Palestinian Media Network)
9. ஸமெஹ் அல் அரியன் – அல் அக்ஸா தொலைகாட்சி(Al-Aqsa TV)
10. முஹம்மது தஹர் – ஆசிரியர், அல் ரிஸாலா பத்திரிகை(Editor in al-Resala paper)
11. அப்துல்லாஹ் வஜன் – விளையாட்டுதுறை செய்தியாளர்(Sports Journalist)
12. காலித் ஹமதா மகத் – ஸஜா செய்திதள இயக்குனர் (Director of Saja news website)
13. ஷாதி ஹம்தி அய்யாத் – சுதந்திர செய்தியாளர்(Freelance Journalist)
14. முஹம்மது நூர் அல் தின் அல் டைரி – புகைப்பட நிபுணர், பலஸ்தீன் வலைப்பின்னல்(Photojournalist works in the Palestinian Network)
15. அலி அபு அஃபெஷ் – தோஹா ஊடகத்துறை(Doha Center for Media)
16. ஸிமோன் கேமிலி – இத்தாலி செய்தியாளர், அஸோசியேட் ப்ரஸ்(Photographer in the Associated Press)
17. அப்துல்லாஹ் ஃபதல் முர்தாஜா – சுதந்திர செய்தியாளர்(Freelancer)
உரத்த சிந்தனை ...
****************************
1.இது போன்ற செய்திகளில் முஸ்லிம் நாடுகளில் உள்ள பத்திரிக்கையாளர்கள் அதிகம் கொல்லப்படுவதை அறிந்து கொள்ள முடிகின்றது .. முதலாளித்துவம் மற்றும் பாசிச சிந்தனைகளுக்கு சிம்ம சொப்பனமாக அவர்கள் இருக்கின்றார்கள் என்பது நிதர்சன உண்மை
****************************
1.இது போன்ற செய்திகளில் முஸ்லிம் நாடுகளில் உள்ள பத்திரிக்கையாளர்கள் அதிகம் கொல்லப்படுவதை அறிந்து கொள்ள முடிகின்றது .. முதலாளித்துவம் மற்றும் பாசிச சிந்தனைகளுக்கு சிம்ம சொப்பனமாக அவர்கள் இருக்கின்றார்கள் என்பது நிதர்சன உண்மை
2.உலக ஊடகங்கள் மிகப்பெரிய அரசியல் ஆயுதங்களாகவும், அதிகார கைப்பற்றலுக்கு உதவும் காரணிகளாகவும் இருக்கின்றன ..
3.ஐரோப்பா ,அமெரிக்கா போன்ற நாடுகளில் எதிர்கால அரசியல் சிந்தனை நீதிக்கான அரசியல் தத்துவங்களுக்கு பின்னால் சென்று விடாமல் தடுக்க நீதிக்கான பத்திரிக்கையாளர்களையும் செய்திகளையும் முடக்குவது என்பது அதிகார வர்க்கத்தின் நியதி என்பது இது போன்ற தகவல்களில் தெளிவாக புலானகின்றது ...
4.நீதிக்கு ஆதரவாக செயல்படும் நல்ல பத்திரிக்கையாளர்கள் பலரை தங்கள் நாடுகளில் முடக்கி சித்ரவதை செய்து விட்டு பிரான்ஸ் நாட்டில் நடந்தசார்லி ஹெப்டோ தாக்குதலுக்கு ஆதரவாக அணிசேர்வது மிகப்பெரிய நகைச்சுவை அரசியல் என்பது புலனாகின்றது
5.சார்லி ஹெப்டோ தாக்குதலுக்கு குரல் கொடுத்த உலக கருத்துப் போராளிகள் இவர்களுக்காவும் தங்கள் குரலை உயர்த்துவார்களா ?
-அபூஷேக் முஹம்மத்...
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval