Friday, January 9, 2015

உங்கள் விருப்பப்படி மொபைலை நீங்களே உருவாக்கி கொள்ளலாம்!

ஒரு மொபைலை வாங்கினால் அதிக பட்சம் இரண்டு ஆண்டுகள் தான். பிறகு அடுத்த மாடலுக்குத் தாவி விடுகின்றனர். இதனால் இ-வேஸ்ட் எனப்படும் எளிதில் மட்காத மின்னணு குப்பை மலைபோலக் குவிந்து சுற்றுச்சூழலுக்கு வேட்டு வைக்கின்றன. கூகுள் இதைத் தடுப்பதற்காக, 'புராஜக்ட் ஆரா' என்ற மொபைல் முறையை 2015 மார்ச்சில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதில் உள்ள சிறப்பம்சம், மொபைல் உதிரி பாகங்களை வாங்கி நீங்களே பொருத்திக்கொள்ளலாம். இதை 'மாடுலர்' அமைப்பு என்கின்றனர். அதாவது மொபைலின் எல்லா பாகங்களும் சதுரம், செவ்வகம் என்று சிறிதும் பெரிதுமான வில்லைகள் போல் இருக்கும். இவற்றை வாங்கி ஆராவின் முதுகெலும்பாக இருக்கும் எண்டோஸ்கெலட்டன் என்ற உலோகப் பட்டையில் மாட்டினால் உங்கள் மொபைல் ரெடி!
கூகுள் இந்த எண்டோஸ்கெலட்டன மட்டுமே தயாரித்து விற்கும். ஆரா மொபைலில் எல்லாமே தனித் தனி வில்லைகளாக இருப்பதால் ஒருவர் எனக்கு 5 எம்.பிக்கு பதில், 12 எம்.பி கேமரா வேண்டும் என்றால், அதை வாங்கி ஆராவில் பொருத்தலாம். “பைக் டயர் பங்க்சரானால் நாம் அதை மட்டும்தான் மாற்றுவோம்; பைக்கையே கடாசுவதில்லை. அதேபோல மொபைலிலும், திரை உடைந்தால் அதை மட்டும் மாற்றும் விதத்தில் மொபைலில் வசதி தேவை,” என்கிறார் கூகுளின் புராஜக்ட் ஆராவுக்கு முன்னோடியான போன்பிளாக்ஸை உருவாக்கிய டேவ் ஹாக்கன்ஸ். இவரது போன் பிளாக்ஸ் திட்டம் இணையத்தில் பரபரப்பை உண்டாக்கவே மோட்டரோலா அவருடன் கூட்டு சேர்ந்தது. ஆனால் மோட்டரோலாவை கூகுள் விலைக்கு வாங்கி, பிறகு லெனோவாவுக்கு விற்றுவிட்டாலும், இந்த ஆராவை மட்டும் கூகுள் வைத்துகொண்டது. மினி, மீடியம் மற்றும் ஜம்போ ஆகிய மாடல்களில் ஆரா வரும்.
courtesy.Dinamalar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval