Sunday, January 18, 2015

எச்சரிக்கை - பி.எஸ்.என்.எல் பெயரில் ஒரு "சதுரங்க வேட்டை"


cell phoneஇன்று எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம்.  சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்து கொண்டிருந்தேன்.
அப்போது  அலைபேசியில் ஒரு அழைப்பு. ராமன் சாரா என்று கேட்டு நாங்கள் டெலிகாம் டிபார்ட்மெண்டிலிருந்து பேசுகிறோம். உங்கள் எண்ணை எங்கள் சிறப்புத் திட்டத்தின் படி தேர்ந்தெடுத்து நான்கு  பவுன் தங்கம் அளிக்கப் போகிறோம் என்று சொன்னது அக்குரல்.

விலாசம் கேட்டார்கள். என் டெலிபோன் பில்லே வீட்டிற்குத்தானே அனுப்பிகிறீர்கள்(என்னுடையது போஸ்ட் பெய்ட் திட்டம்). உங்களிடமே இருக்குமே  எதற்கு கேட்கிறீர்கள் என்ற போது எங்களுக்கு எண் மட்டும்தான் கொடுத்தார்கள். விலாசத்தை வாடிக்கையாளரிடம் கேட்டு உறுதிப் படுத்திக் கொள்ளச் சொல்லியுள்ளார்கள் என்றார்கள். எங்கே இருந்து பேசுகிறீர்கள் என்றதற்கு டெல்லியிலிருந்து பேசுகிறோம் என்றார்கள்.

அதற்குள் கண்காட்சி வளாகம் நெருங்கி விட்டதால் போனை துண்டித்து விட்டேன். பிறகு பி.எஸ்.என்.எல் தோழர் ஒருவரை தொடர்பு கொண்ட போது அது போல எதுவும் திட்டமில்லை என்றார்.

அடுத்து மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு. விலாசம் சொல்லுங்கள். பார்சல் உங்கள் போஸ்ட் ஆபீசிற்கு வரும். 2500 ரூபாய் கொடுத்து விட்டு பெற்றுக் கொள்ளுங்கள்  என்றார். நான் ஏற்கனவே பி.எஸ்.என்.எல் லில் பேசி விட்டேன். என் நேரத்தை விரயம் செய்யாதீர்கள் என்று உரத்த குரலில் சொல்லவும் "2500 ரூபாய்க்கு நாலு பவுன் தங்கம் கிடைப்பதை இழக்கிற முட்டாளாகாதே" என்று சொல்லி துண்டித்து விட்டார்கள்.

2500 ரூபாயை இழந்து முட்டாளாகாத கோபம் அவர்களுக்கு.

அந்த எண் +9178581847

ஆகவே அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை.

பி.எஸ்.என்.எல் பெயரில் வரும் இது போன்ற சதுரங்க வேட்டை மோசடிகளில் ஏமாந்து விடாதீர்கள்.

நன்றி : ஒரு ஊழியனின் குரல்
courtesy;inneram.com

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval