Saturday, January 3, 2015

ஹிஜாப் இல்லாமல் விளையாட முடியாது .

.கொரியாவில் அரங்கை விட்டு வெளியேறிய கத்தார் மகளிர் அணி//
கொரியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று கட்டார் மற்றும் மொங்கோலிய பெண்கள் அணிகளுக்கு இடையிலான பாஸ்கட் போல் போட்டி நடைபெற இருந்தது.
போட்டியில் கலந்துகொள்ளும் கட்டார் வீரங்கனைகள் ஹிஜாபுடன் மைதானாத்துக்குள் நுழைந்தார்கள். ஆனால் ஹிஜாப் அணிந்து விளையாட முடியாது என நடுவர் தடைவிதித்தார்.
அப்போது நடுவர்களுக்கும் போட்டியாளர்களுக்குமிடையில் நடந்த நீண்டநேர
வாக்குவாதத்தின்பின்னரும் நடுவர் ஹிஜாப் அணிந்து விளையாட அனுமதி வழங்காததால், தாம் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு அரங்கைவிட்டு வெளியேரியது கட்டார் பெண்கள் அணி.
போட்டி நடத்தமாலேயே மொங்கோலிய அணி வெற்றியீட்டியதாக தீர்மாணிக்கப்பட்டது.
ஒரு சர்வதேச போட்டியை விடவும் ஹிஜாபுமும் மார்க்கமும் முக்கியம் என கருதி கட்டார் வீரங்கனைகள் பாராட்டுக்குரியவர்கள்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval