Saturday, January 17, 2015

விசேட தகவல்கள்

கண்பார்வைக் கோளாறு ஏற்படக் காரணம்:-
1· உறவினர் முறையில் திருமணம் செய்பவர்களின் குழந்தைகளுக்கு கண்பார்வைக் குறைபாடு ஏற்படுகின்றது.
2· கருவிலிருக்கும் போது குழந்தைக்குத் தேவையான ஊட்டச் சத்து குறைபாட்டாலும் பார்வைக் கோளாறு ஏற்படுகின்றது.
3· சரியான உணவு உண்ணாமல் இரத்தச் சோகை ஏற்பட்டாலும் பார்வைக் குறைபாடு உண்டாகும்.
4·தூக்கமின்மையாலும், மங்கிய ஒளி அல்லது கண் கூசும் அளவு வெளிச்சம் உள்ளஇடங்களில் வேலை செய்பவர்களுக்கும் கண் பார்வைக் குறைபாடு உண்டாகும்.
5·தற்போதைய கணினி உலகில் கண்களுக்குத் தான் அதிக வேலை உண்டாகிறது. இரவுகண்விழித்து கணினி முன் அமர்ந்து அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்குறைபாடு எளிதில் உண்டாகும்.
6· ஈரல் பாதிக்கப்பட்டு பித்தம்அதிகரித்தால் முதலில் தாக்கப்படுவது காண் பார்வை நரம்புகளே... இதனால்தான்காமாலை நோய்களின் அறிகுறி கண்களில் தெரியவரும்.
7· மது, புகை, போதைப் பொருள்கள் உண்பவர்களின் கண்கள் எளிதில் பாதிப்படையும்.
8·தொலைக்காட்சியின் முன் அமர்ந்து அதிக நேரம் தூக்கமில்லாமல்நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களின் கண்கள் வறட்சி கண்டு கண்பார்வை குறைபாடுஉண்டாகும்.
9· நீரிழிவு நோய்க்காரர்களுக்கும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் கண் பார்வைக் குறைபாடு உண்டாகும்.
10· அடிக்கடி தலைவலி, தலைச்சுற்றல், கிறுகிறுப்பு உள்ளவர்களுக்கும் பார்வைக் குறைபாடு உண்டாகும்.
கண்நேய் வரும்முன் காக்க:
1·கண்களில் ஏதேனும் தூசு விழுந்தாலோ அல்லது வலி, ஏற்பட்டாலோ கண்மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனை யில்லாமல் கண்களுக்குமருந்துகள் இடக் கூடாது.
2· அதிக வெயிலில் அல்லது வெப்பமான பகுதிகளுக்குச் செல்ல நேர்ந்தால் குளிர் கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டும்.
3· ஒரு நாளைக்கு 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். நல்ல தூக்கமே கண்களைப் பாதுகாக்கும்.
4·கணினியில் வேலை செய்பவர்கள் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைசெய்யக் கூடாது. அவ்வப்போது குறைந்தது 5 நிமிடமாவது விழிகளை சுழலவிட்டுபின் கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்வதுபோல் இருக்க வேண்டும்.
5· உணவில் தினமும் கீரைகள், காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். காரட் கண்களுக்கு மிகவும் சிறந்தது.
6· எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட்டு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
7· மது, புகை, போதை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
8· உடல் சூடு அடையாமலும், பித்த மாறுபாடு அடையாமலும் இருப்பதற்கு வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
9· தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.
10· மங்கலான ஒளியில் படிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
11· அதிக வெயில் இருக்கும்போது சூரியனைப் பார்க்கக்கூடாது.
12· நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval