Wednesday, April 29, 2015

புத்தகம் - புதியதோர் உலகைச் செய்யும்


புத்தகைத்தைப் புரட்டிப்பார்
புலப்படும் அதில்
புதியதோர் உலகம்

Tuesday, April 28, 2015

அபுதாபியில் தங்கக் கட்டிகளை வழங்கும் ஏ.டி.எம். இயந்திரம்

Untitled-13ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பேலஸ் ஓட்டலில் ஒரு ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பணமான திர்ஹம் நோட்டுகள் மற்றும் வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளை இந்த இயந்திரத்தில் செலுத்தினால் 10 கிராம் முதல் பல கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் வரை 320 வகை அளவுகளில் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம்.

குறுகிய இடத்தில் தானாகவே பார்க்கிங் செய்துகொள்ளும் அதிநவீன EOssc2 கார்

நமது நகரங்களில் பரபரப்பான நேரங்களில் காரை பார்க்கிங் செய்வது மிகவும் கடினமானதாகும், மேலும், அவசர நேரங்களில் இறுக்கமான இடத்தில் சிக்கி இருக்கும் காரை எடுப்பதும் கடினமாகும். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜெர்மன் பொறியாளர்கள் புதுமையான தீர்வை கண்டறிந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட இலங்கை தமிழர் உள்பட 8 பேரின் மரண தண்டனை நிறைவேற்றம் சுட்டுக் கொல்லப்பட்டனர்

201504290இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழர் மயூரன் சுகுமாறன் உள்பட 8 பேரின் மரண தண்டனை நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது.
போதைப்பொருள் கடத்தல்

Monday, April 27, 2015

மரண அறிவிப்பு


அதிரை புதுமனை தெருவை சார்ந்த மர்ஹும் ஹாஜி நெ .அ மு நெய்னா முஹம்மது சாஹிப் அவர்களின் மகனும் ,நெ அ மு அஹமது இப்ராகிம் அவர்களின் சகோதரரும் இமிதியாஸ் அஹமது ,அஹ்மத் ஹசன் இவர்களின் தகபனரும் B .தாஜுதீன் அவர்களின் மாமானருமகிய அஹமது முகைதீன் (பேங்க் )அவர்கள்  இன்று மாலை வாபதாகி விட்டார்கள் அன்னாரின் நல்லடக்கம் நாளை காலை 8:00 மணியளைவில் மறைக்க பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்ய படும்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமையின் சுவனவாழ்விற்க்காக அல்லாஹ்விடம் .  துவா செய்வோம்.
தகவல்; Mohamed Zifri 
London  U .K .

Sunday, April 26, 2015

வில்லங்கம் இல்லாத சொத்து வாங்க வேண்டுமா?

ld1606
எத்தகைய சொத்து வாங்கினாலும் அந்த சொத்துக்கான ஆவணங்கள் வில்லங்கம் இல்லாமல் இருந்தால்தான் அந்த சொத்தின் மீது நாம் உரிமை கொண்டாட முடியும். ஆவணங்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அந்த சொத்து பிரச்சினைக்குரியதாக மாறிவிடும். எனவே சொத்து வாங்கும்போது ஆவண சரிபார்ப்பு விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்: ஒரு பார்வை

11150372_1049050388457663_6798867244815784740_nநேபாளத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் கடந்த 80 ஆண்டுகளில் மிகவும் மோசமானதும் சக்தி வாய்ந்ததும் ஆகும். அதிக எண்ணிக்கையில் மக்கள் வசிக்கும் காத்மாண்டு பள்ளத்தாக்கில் நேற்று ரிக்டர் அளவில் 7.9 புள்ளிகள் கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியதோடு 1000 உயிர்களை பலிவாங்கியது.

நேபாளத்தில் சிக்கியுள்ள 311 தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை: அவசர உதவி எண்கள் அறிவிப்பு


TamilNadu_Logoபயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் சிக்கியுள்ள 311 தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அவசர உதவி தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Friday, April 24, 2015

டில்லியில் தமிழக அரசு


'சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் உள்ள சிக்கல்களுக்கு, தீர்க்கமான முடிவுகளை எடுக்காமல், அவசர கோலத்தில், இதுகுறித்த அரசியல் சட்ட திருத்த மசோதாவை கொண்டு வருவது, ஏற்புடையது அல்ல. மாறாக, இவ்விஷயத்தில், மாநில அரசுகளின் கவலைகளைத் தீர்த்து, கருத்தொற்றுமையை ஏற்படுத்திய பிறகே, இந்த மசோதாவை, மத்திய அரசு கொண்டு வர வேண்டும்'

த.மா.கா.வின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது ஜி. வாசன் தலைவராக தேர்வு

gk-vasanத.மா.கா.வின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா ஜலபதி மண்டபத்தில் இன்று நடந்தது.த.மா.கா பொதுக்குழு கூட்டம் தொடங்கியதும் கட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றது.இதில் ஜி.கே.வாசன் த.மா.கா.வின் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். உடனே பொதுக்குழு உறுப் பினர்கள் பலத்த ஆரவாரத் துடன் கரவொலி எழுப்பி னார்கள்.அதை தொடர்ந்து கட்சியின் செயல் திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி

Madras High Courtதமிழகத்தில் உள்ள 1,567 காவல் நிலையங்களிலும் 5 ஆண்டுகளில் சிசிடிவி கேமராக்கள் (கண்காணிப்புக் கேமராக்கள்) பொருத்தப்படும் என்று காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Thursday, April 23, 2015

இஸ்லாம் ஓர் அறிவுப்புர்வமான மார்க்கம்.💯


காதல் 
By admin December 26, 2010 Blogபாடல்களைக் கேட்டு 
மனதில்
காமத்தை 
வளர்க்காதே

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் வஸல்லம் அன்னவர்கள் நவின்றார்கள்:


prayer is the second pillar of islam it is obligatory on every muslim ...இறைவனை நினைவுகூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உள்ளம், இறைவழியில் நடத்திட கணவனுக்கு உதவிடும் இறைநம்பிக்கையுள்ள மனைவி.. இவையே அனைத்தையும்விட சிறந்த செல்வமாகும்." (அல் ஹதீஸ்)
[7:11pm, 4/19/2015] Fadel House: நான்
(ஸல்) அவர்களிடம்

Wednesday, April 22, 2015

மூத்த குடிமக்களைப் பாதுகாக்க போலீஸாரால் உருவாக்கப்பட்ட ’டயல் 2’ சிஸ்டத்தை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த திட்டம்

வீட்டில் தனியாக இருக்கும் மூத்த குடி மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக நீலாங்கரை போலீஸாரால் உருவாக்கப்பட்ட ‘டயல் 2’ சிஸ்டத்தை, தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கொண்டைக்கடலை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!

IMG_7880சப்பாத்திக்கு பலரும் விரும்பி சாப்பிடுவது கொண்டைக்கடலை மசாலா என்னும் சன்னா மசாலா. இது ஒரு வட இந்திய உணவுப் பொருள். தற்போது நம் வீட்டில் உள்ளோரும் இந்த கொண்டைக்கடலை மசாலாவின் சுவைக்கு அடிமையாகிவிட்டனர். இதற்கு கொண்டைக்கடலை தான் காரணம். அத்தகைய கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

Tuesday, April 21, 2015

ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்கவேண்டியவை

சென்னை போக்குவரத்து தகவல்களை அளிக்கும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்

Raft  MTC Bus & Train, Chennai - Android Apps on Google Play_20150421172323சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், போக்குவரத்து தகவல்களை உள்ளடக்கிய பிரத்யேக ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.

இப்படியும் ஒரு கலெக்டர்!

சிறந்த திட்டங்களை செயல்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கான பிரதமர் விருதை, பெரம்பலூர் ஆட்சியர் தாரேஸ் அகமதுவிற்கு அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, தங்கள் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்திருக்கும் பெருமைக்காக பெரம்பலூர் மாவட்டமே வாழ்த்துப்பா பாடுகிறார்கள்.

எல்லா வங்கிகளிலும் ஏடிஎம் மூலமாக பணம் டெபாசிட் செய்யும் வசதி!

atm19ஏடிஎம் இயந்திரங்களில் பணம் டெபாசிட் செய்யும் வசதி உள்ளது. பெரும்பாலான வங்கிகள் இந்த வசதியை அறிமுகப்படுத்தி விட்டன. இருப்பினும், எண்ணிக்கையில் இவை குறைவு. இதனால், பணம் டெபாசிட் செய்ய வங்கிக்கு செல்லவேண்டிய அவசியம் இன்னமும் உள்ளது. பணத்தை டெபிட்கார்டு பயன்படுத்தி எந்த வங்கி ஏடிஎம்மிலும் எடுக்கலாம்.

400 கிலோ மீட்டர் வேகத்தில் பாயும் புகாட்டி கார்கள்: துபாய் போலீசார் அசத்தல்

dubai-police-bugatti-veyron-is-a-1000-hp-patrol-car-video-76417_1ணிக்கு 400 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சீறிப்பாயக்கூடிய ’புகாட்டி வெய்ரான்’ ரக கார்களை துபாய் போலீசார் தங்களது போலீஸ் ரோந்துக் கார்களின் அணிவரிசையில் புதிதாக இணைத்துள்ளனர்.
மணிக்கு சுமார் 350 கி. மீட்டர் வேகத்தில் பாய்ந்துச் செல்லக்கூடிய லோம்பார்கினி அவென்ட்டடார், காரின் விலை 5 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்.

Sunday, April 19, 2015

காஸ் சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் நுகர்வோருக்கு ரூ.50 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்

LP_gas_cilinderபொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகிக்கும் காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால் ரூ.50 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆனால் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.

அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக அஜ்மீர் தர்காவுக்கு காணிக்கையாக போர்வை அனுப்பிய ஒபாமா

அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக அஜ்மீர் தர்காவுக்கு காணிக்கையாக போர்வை அனுப்பிய ஒபாமாஅமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு போர்வை ஒன்றினை காணிக்கையாக அனுப்பியுள்ளார்.
அஜ்மீரில் உள்ள புகழ்பெற்ற காஜா கரிப் நவாஸ் தர்காவின் 803-ம் ஆண்டு உருஸ் விழா விரைவில் தொடங்க உள்ளது.

Saturday, April 18, 2015

இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்



இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார். அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர்-Robert F. Shedinger – இயேசு ஒரு முஸ்லிம் என்று தனது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

Friday, April 17, 2015

சகோதரி ஜோதிமனி அவர்களின் பதிலடி.

"இந்திய முஸ்லிம்கள் நாட்டுப்பற்று மிக்கவர்கள். நாட்டுக்காக உயிரையும் தருவார்கள்"
-நரேந்திர மோடி.
மோடி அவர்களுக்கு: இந்திய முஸ்லிம்களுக்கு யாரிடம் இருந்தும் நாட்டுப்பற்று நற்சான்றிதழ் தேவையில்லை. இந்த தேசத்தின் விடுதலைக்காக கல்வி, செல்வம் , உயிர் உட்பட அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பாகிஸ்தான் என்ற ஒரு தேசம் உருவான போதும் இயல்பாக இந்தியமண்ணைத் தேர்ந்தெடுத்தவர்கள். இந்தியன் அதைத்தான் செய்யமுடியும்.

நம்மள கட்டிதழுவ இந்த அன்பு நிறைஞ்ச உலகம் காத்துன்னு இருக்கு.

இரண்டு நாளாக விடாமல் அழுதுக்கொண்டிருந்த என் குழந்தையை மசூதிக்கு தூக்கின்னு போயி ஊதின்னு வான்னு எங்க அம்மா சொன்னாங்க.
இதுக்கு முன்னாடி மசூதிக்குள்ள பலமுறை நான் போயிருந்தாலும் குழந்தைய தூக்கின்னு போறது இதுதான் முதல் முறை.

Wednesday, April 15, 2015

6 ஜனதா கட்சிகள் இணைந்தன: புதிய கட்சியின் தலைவராக முலாயம் சிங் அறிவிப்பு

Janataparivar_2374777fஜனதா பரிவார் என்ற அமைப்பில் முன்பு இருந்த 6 ஜனதா கட்சிகள் புதிய கட்சி ஒன்றை தோற்றுவிக்க இன்று (புதன்கிழமை) ஒன்றாக இணைந்தன. புதிய கட்சியின் தலைவராக சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வந்துவிட்டது டூ-வீலர் ஆம்புலன்ஸ்!

ஆம்புலன்ஸ் சைரன் கேட்டதும் பதற்றத்தோடு வழிவிட நினைத்தாலும், பைக் ஒதுங்கக்கூட இடம் இருக்காதபடி டிராஃபிக் இந்தியாவாக மாறிவிட்டன இந்திய நகரங்கள். அதுவும் பீக் அவர்ஸில் சொல்லவே வேண்டாம்! டிராஃபிக் நெருக்கடிகளையும் தாண்டி நினைத்த நேரத்தில் ஓர் உயிரைக் காப்பதற்கு என்னதான் வழி?,

Monday, April 13, 2015

நான் படித்த மருத்துவம்


Ravi SR Ravi
Dr.சிவராமன் அவர்களின் பேச்சின் சுருக்கம்.
1--மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம்
பிஸ்கட்,பிரட்,புரோட்டா,
சத்து இல்லை என்பதால் அல்ல
அதில் விஷம் உள்ளது இதை கொடுத்தால்
உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின்
அழிவை காண்பீர்கள்.விழித்து கொள்ளுங்கள்

ஐந்து வேளை தொழுபவர்களுக்கே இனி திருமண உதவித்தொகை: சவுதி அரசு புதிய நிபந்தனை

ஐந்து வேளை தொழுபவர்களுக்கே இனி திருமண உதவித்தொகை: சவுதி அரசு புதிய நிபந்தனைசெல்வ வளமை மிக்க சவுதி அரேபியாவில் திருமணம் செய்துகொள்ள விரும்பும் இளைஞர்கள் பெண்களுக்கு சீதனத்தொகை (மஹர்) மற்றும் தங்க நகைகளை அளிக்க வேண்டும். இதற்கு வழியில்லாமல் சற்று கஷ்டமான சூழ்நிலையில் இருப்பவர்களின் திருமண செலவுக்கு தேவையான தொகையை சவுதி அரசின் சமூக நலத்துறை அமைச்சகம் அளித்து வருகின்றது.

Sunday, April 12, 2015

இறைவா… இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு

Interested in acquiring a used cruise ship? Contact us anytime and we ...
கப்பல் ஒன்று கடலில் வழிதவறி
செல்லும்போது புயலில்
சிக்கி மூழ்கிவிடுகிறது.

மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம்

More on History of South India (188 Articles)நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!

கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் கட்டாய கருத்தடை ஆபரேஷன்: பெண் சாமியார் சர்ச்சை பேட்டி

sadhvi-deva-thakur1முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவ மக்கள் தொகை அதிகரிப்பதை கட்டுப்படுத்த அவர்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று இந்து மகாசபை தலைவர் சாத்வி தேவா தாகூர் தெரிவித்துள்ளார். அனைத்து இந்திய இந்து மகாசபையின் துணை தலைவர் சாத்வி தேவா தாகூர். அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

ஆட்டி வைக்கும் அண்ட்ராய்டு! என்ன ஆகுமோ வருங்கால தலைமுறை!!

Android-Phonesஅண்ட்ராய்டின் வருகை நமது வாழ்வியலை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டிருக்கிறது என்றுக் கூட திரும்பிப் பார்க்க விடாமல் நம்மை அதன் பிடிக்குள் வைத்திருக்கிறது. அடுத்தடுத்த அப்டேட்டுகள், புதுப்புது ஃபீச்சர்கள் என்று நமது ஃப்யூச்சரை அதன் தொடுத் திரையினுள் சிறைப்பிடித்து வைத்திருக்கிறது.

Saturday, April 11, 2015

கோடையில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம்.

Fresh-Fruit
கோடை காலத்தில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
கோடை காலத்தில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் காத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வெறும் தண்ணீர் இந்த பணியைச் செய்து விட முடியாது. அதற்கு உதவியாக முதலில் வருவது காய்கறிகள்.

தாஜ்மகாலை சிவன் கோவிலாக அறிவிக்கக்கோரி வழக்கு

taj_mahal copyஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சிவன் கோவிலாக (தேஜோ மகாலயா) அறிவிக்க வேண்டும் எனக்கூறி வக்கீல் ஹரிசங்கர் ஜெயின் என்பவர் தலைமையில் வக்கீல்கள் ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த மனுவில், ‘1212-ம் ஆண்டு ராஜா பரமர்திதேவ் தேஜோ மகாலயாவை கட்டினார்.

Friday, April 10, 2015

பேட்டரியில் இயங்கும் ஆட்டோ திருச்சி பெண் கண்டுபிடிப்பு

au_2366456fபெண்களும் இயக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரியால் இயங்கும் குறைந்த விலை கொண்ட ஆட்டோக்களை திருச்சியைச் சேர்ந்த பட்டதாரி அமுதா அறிமுகப்படுத்தியுள்ளார்.
பேட்டரியால் இயங்கும் இந்த ஆட்டோவை, பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஓட்டுநருக்கான உரிமம் பெறவேண்டும்.

தயிரை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!

What is Greek Yogurt?உலக அளவில் மிகவும் பிரபலமான ஒரு உணவுப் பொருள் தான் தயிர். இந்த தயிரை பலவாறு மக்கள் சாப்பிடுவார்கள். அதில் பொதுவானது தயிர் சாதம். குறிப்பாக தென்னிந்தியா மக்கள் மதிய வேளையில் உணவின் போது இறுதியாக தயிர் சாதத்தை சாப்பிடுவார்கள்.

Thursday, April 9, 2015

எழுத்துலக வேந்தன், ஜெயகாந்தன் மறைவு!

ஜெயகாந்தன் மறைந்தாலும், அவர் எழுதிய எழுத்துக்கள் காலத்தால் மறையாது, என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றவை. அவரை இழந்து வாடும் அவருடைய இல்லத்தாருக்கும், நண்பர்களுக்கும், இலக்கிய உலகத்திற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, April 8, 2015

விண்ணப்பங்கள் குவிந்ததால் குலுக்கல் முறையில் எச் 1 பி விசா: அமெரிக்கா முடிவு

us-flagஅமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இன்றி வேலை நிமித்தமாக செல்கிறவர்களுக்கு அந்த நாட்டு அரசு ‘எச் 1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த விசாவுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடத்தில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்த விசாவுக்கான விண்ணப்பங்கள் இந்த ஆண்டும் தேவைக்கு அதிகமாக குவிந்து விட்டன.

பிரபல இஸ்லாமிய பாடகர் நாகூர் அனிபா காலமானார்

பிரபல இஸ்லாமிய பாடகர் நாகூர் அனிபா சென்னையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 96. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜவூன்.
10402464_826483390779160_6062429994623948912_nநாகூர் அனிபா
தி.மு.க. பிரமுகரும், பிரபல இஸ்லாமிய பாடகருமான நாகூர் அனிபா, சென்னை கோட்டூர்புரம் 3–வது மெயின் ரோட்டில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு வயது 96. வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

Tuesday, April 7, 2015

10 ஆண்டுகளை கடந்த டீசல் வாகனங்களுக்கு தடை; தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

pollution carsநகரங்களில் அன்றாடம் பெருகி வரும் வாகனங்களால் காற்றின் தரம் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், பல்வேறு முயற்சிகளுக்கு பின் தேசிய பசுமை தீர்ப்பாயம் டெல்லியில் 10 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கிக் கொண்டிருக்கும் டீசல் வாகனங்களின் போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது.

அல்லாஹ்வுக்கு எதிராக போர் செய்ய விரும்புகிறீர்களா ?

மத்திய அரசு செல்வமகள் என்னும் திட்டத்தை அறிமுகம் செய்து விளம்பரம் செய்து வருகிறது. இந்த திட்டத்தின் முழு விவரம் அறியாத சில மக்கள் செல்வமகள் திட்டத்தில் இணைந்து வருகின்றனர்.
(குறிப்பு : இப்பதிவு மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் பாஜக அரசுக்கு எதிராக இப்பதிவை நாம் வெளியிடவில்லை,

நெஞ்சை நெகிழ வைக்கும் சவூதியில் நடந்த உண்மை சம்பவம்....!!

முகநூலில் சிறந்த பதிவாளர்களில் ஒருவரான சுவனப்பிரியன் ஆசிரியர் நஜீர் அஹமது சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சை நெகிழ வைக்கும் உண்மை சம்பவத்தை அவரே விவரித்துள்ளார்....
ரியாத் பேரூந்து நிலையத்தில் டிக்கெட் முன் பதிவு செய்ய வரிசையில் காத்திருந்தேன்.

M.L.A. ரெங்கராஜன் அவர்களின் அறிவிப்பு



N.r. Rengarajan Mlaதஞ்சை நகரில் ஜீவா அறக்கட்டளையின் தஞ்சாவூர் கேன்சர் சென்டர்என்ற பெயரில் புற்று நோய் மருத்துவ மனை செயல்பட்டு வருகிறது 
நான் ஒரு அறகட்டளை உறுப்பினர் 
பொருளாதரத்தில் பின் தங்கிய நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சேவை நோக்கோடு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
நமது பகுதி மக்கள் பயன் படுத்திக் கொள்ளலாம்.
தஞ்சாவூர் கேன்சர் சென்ட்டர் 
பை பாஸ் ரோடு தஞ்சாவூர்
உதவி தேவை ஆனால் என்னை தொடர்பு கொள்ளலாம் 


அதிகரித்து வரும் வாகனங்களும் அதிர்ச்சி தரும் விபத்துகளும் !?


இன்றைய நாட்களில் நாம் அன்றாடம் தொலைக்காட்சி செய்திகளிளும், பத்திரிக்கைச் செய்திகளிலும், மற்ற அனைத்து ஊடக செய்திகளிலும் அதிகம் வாசிப்பதும் கேட்பதும் கொடூரமாக நடக்கும் சாலைவிபத்துக்களாகத்தான் இருக்கும்... 

ஒருகாலத்தில் மாட்டுவண்டிகளும் குதிரைவண்டிகளும் சைக்கிளும் வாகனமாக அதிகப்படியாக பயன்பாட்டில் இருந்தபோது இத்தனை சாலைவிபத்துக்களோ,

Monday, April 6, 2015

மூலை முடுக்கெல்லாம் குட்கா விற்பனை ஜோர்: வாய்ப் புற்றுநோயில் முதலிடம் வகிக்கும் சென்னை


குட்கா, பான்மசாலா உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட் களுக்கு தமிழகம் உட்பட 29 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டாலும் தமிழகத்தில் அவை பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் வாய்ப் புற்றுநோய் பாதிக் கப்பட்ட இந்திய நகரங்களில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக் கின்றன

Sunday, April 5, 2015

நபி(ஸல்) அவர்களுடன் சுவர்க்கத்தில்


இஸ்லாம் அழைக்கிறதுசுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா?

நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)
உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?

வெளிநாடு

"கல்யாணம் பண்ணிப்பார்.... வீடு கட்டிப்பார்"- இது பழசு... வெளிநாடு வந்துப்பார்"... இது புதுசு. பார்ப்பதற்குத்தான் ஆடம்பரம். ஆனாலும் இது ஒரு மாய வலை. சந்தோஷம் என்று உள்ளேயும் இருக்க முடியாது. வேண்டாம் என்று வெளியிலும் போக முடியாது.

உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

Power Inverter (IV-250W-12V-USB)இப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம்.

Saturday, April 4, 2015

இரண்டு இஸ்லாமிய பெண்மணிகள் ஒரு தொலைகாட்சி விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்.

How to Adopt The Real Muslim Hijab Fashionஇரண்டு இஸ்லாமிய பெண்மணிகள் ஒரு தொலைகாட்சி விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்... தலைப்பு புர்காவை தடை செய்யும் மசோதா பற்றியது...இதில் ஒரு இஸ்லாமிய பெண் ஹிஜாப் அணிந்திருந்தார். மற்றொருவர் ஹிஜாப் இல்லாமல் ஸ்கர்ட் அணிந்து அமர்ந்திருந்தார்..
அந்த ஸ்கர்ட் அணிந்து அமர்ந்திருந்த பெண் ஹிஜாபை உலகம் முழுவதும் தடை செய்யும் மசோதாவை கொண்டு வரவேண்டும் என்று தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்.