
(குறிப்பு : இப்பதிவு மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் பாஜக அரசுக்கு எதிராக இப்பதிவை நாம் வெளியிடவில்லை, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அப்போது இந்த திட்டம் கொண்டு வரப்பட்டாலும் அப்போதும் நமது நிலையை வெளிப்படுத்தியே இருப்போம்...)
தொடர்ந்து 14 வருடம் நாம் பணம் கட்டி விட்டு மேற்கொண்டு 7 ஆண்டுகள் கழித்து அதாவது 21 ஆண்டுகள் கழித்து வட்டியை சேர்த்து அரசு நமக்கு கூடுதல் பணத்தை தரும்...
இது தான் செல்வமகள் திட்டம் , இந்த 21 ஆண்டுகளில் மத்தியில் 4 முறை ஆட்சி மாற்றம் வந்து விடும்.
இப்போது வட்டி சம்பந்தமாக இஸ்லாத்தின் நிலையை பார்ப்போம்....
இஸ்லாமிய சட்டத்தை பொறுத்தவரை வட்டி வாங்குவது, வட்டி கொடுப்பது, வட்டிக்கு துணை நிற்பது, வட்டிக்கு கணக்கு எழுதுவது என்று வட்டி சம்பந்தமாக கடும் நிலைப்பாட்டை கொண்டுள்ளது இஸ்லாம்.
மேலும் வட்டி சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஈடுபடக்கூடியவர்கள் அல்லாஹ்வுடனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடனும் போர் செய்வதற்கு நாம் தயாராகி விட்டோம் என்று திருக்குர்ஆன் சொல்கிறது.
ஆகையால் மிகப்பெரும் பாவங்களில் ஒன்றான வட்டியை ஒட்டுமொத்த மக்களும் வெறுத்து ஒதுக்க வேண்டும், வட்டியிலிருந்து வரக்கூடிய பணத்தில் எவ்வித பரக்கத்தும் கிடையாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்....
நம்பிக்கை கொண்டோரே அல்லாஹ்வை அஞ்சுங்கள், நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்.
அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் திருந்திக்கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது
(திருக்குர்ஆன் 2:278, 279)
(திருக்குர்ஆன் 2:278, 279)
மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள் (நூல்: புகாரி 5962)
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.
(அல்குர்ஆன் 2:275)
(அல்குர்ஆன் 2:275)
இந்த அளவுக்கு இஸ்லாம் வட்டியை மிக கடுமையான பாவமாக பிரகடனம் செய்கிறது.
நமது உழைப்பின் மூலம் வரும் பொருளாதாரத்தை சேமித்து வைத்து ஹலாலான வழியில் வாழ்கையை அமைத்து கொள்வோம்
courtesy;facebook
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval