உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சிவன் கோவிலாக (தேஜோ மகாலயா) அறிவிக்க வேண்டும் எனக்கூறி வக்கீல் ஹரிசங்கர் ஜெயின் என்பவர் தலைமையில் வக்கீல்கள் ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த மனுவில், ‘1212-ம் ஆண்டு ராஜா பரமர்திதேவ் தேஜோ மகாலயாவை கட்டினார். பின்னர் ஜெய்ப்பூர் மன்னர் ராஜா மான்சிங் இதை கைப்பற்றினார். அவருக்குப்பின் அதை ராஜா ஜெய்சிங் நிர்வகித்தார். 1632-ம் ஆண்டு ஷாஜகான் இதை கைப்பற்றினார். அதன் பிறகு அங்கு மும்தாஜின் நினைவு சின்னம் ஆக்கப்பட்டு, முகலாய பாணிக்கு கட்டிடங்களில் மாற்றம் செய்யப்பட்டது’ என்று கூறியுள்ளனர்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், இது குறித்து அடுத்த மாதம் (மே) 5-ந் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு, கலாசார அமைச்சகம், உள்துறை செயலாளர் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மே 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.
முன்னதாக, தாஜ்மகாலுக்கு உரிமை கோரி வழக்கு தொடர அனுமதிக்கும்படி வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவை இதே நீதிமன்றத்தின் நீதிபதி தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval