Thursday, April 2, 2015

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களின் ரூ.742 கோடி சொத்து முடக்கம் - அமலாக்கப் பிரிவு நடவடிக்கை

கலாநிதி மாறன், தயாநிதி மாறன்| கோப்புப் படம்.முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோருக்கு சொந்தமான ரூ.742 கோடி சொத்துகளை அமலாக்கப் பிரிவு முடக்கியது.
தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமத்தை நிறுத்தி வைத்தும்,
தொழிலதிபர் சிவசங்கரனை நிர்பந்தம் செய்து ஏர்செல் பங்குகளை மலேசியா வைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனி கேஷன்ஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாகவும், அதன் மூலம் மேக்சிஸ் நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனம் மூலம் மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான சன் நெட்வொர்க் குழுமத்தில் முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
மாறன் சகோதரர்கள் மீது, ரூ.742 கோடி சட்ட விரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக (கருப்புப் பணத்தை வெள்ளை யாக மாற்றுதல் தடைச் சட்டம்) சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதில், ஒரு பகுதியாக மேக்சிஸ் நிறுவனம் சன்நெட்வொர்க் குழுமத்தில் ரூ.629 கோடி முதலீடு செய்ததாகக் குற்றம்சாட்டியது.
2ஜி ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ரூ.1,700 கோடி மோசடி செய்ததாக, அதற்கு விளக்கம் கோரி அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியது.
இவ்வழக்கு தொடர்பாக கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் தயாநிதி மாறனிடம் 2-3 நாட்கள் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், தயாநிதி மாறன், கலாநிதி மாறனுக்கு சொந்தமான ரூ.742 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கப் பிரிவு அறிவித்துள்ளது.

courtesy;The Hindu tamil 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval