அண்ட்ராய்டின் வருகை நமது வாழ்வியலை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டிருக்கிறது என்றுக் கூட திரும்பிப் பார்க்க விடாமல் நம்மை அதன் பிடிக்குள் வைத்திருக்கிறது. அடுத்தடுத்த அப்டேட்டுகள், புதுப்புது ஃபீச்சர்கள் என்று நமது ஃப்யூச்சரை அதன் தொடுத் திரையினுள் சிறைப்பிடித்து வைத்திருக்கிறது.
பார்க், பீச், சினிமா, நண்பர்கள் என்ற பல எண்ணற்ற சந்தோஷமான நிகழ்வுகளை தனது தொழிநுட்பம் மூலம் களவாடிக் கொண்டது அண்ட்ராய்டு. ஷாப்பிங், விளையாட்டு, பொழுபோக்கு என்று அனைத்தையும் தனது மென்பொருள் பயன்பாட்டு செயலிகளுள் முடிந்து வைத்துக் கொண்டது.
இந்த மாபெரும் தொழில்நுட்ப வளர்ச்சி உங்கள் வாழ்வியலில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் என்னென்னவென்று அறிந்துக் கொள்ளுங்கள்…
குறுஞ்செய்தி நோக்கியா 1100 மொபைல்களை பயன்படுத்தியவர்களுக்கு மட்டுமே தெரியும் குறுஞ்செய்தியின் மதிப்பு என்னவென்று. தட்டச்சு கருவியை மிஞ்சும் வேகம் காட்டி நொடிக்கு நொடி செய்திகளை பறக்கவிட்டபடி திரிந்த காலம் அது. குரூப் மெசேஜ், அனுப்புவது ஒரு அலாதியான விஷயமாகும். அதுவெல்லாம், இன்று வாட்ஸப்பின் வருகைக்கு பின் வாஸ்து மாறி போய்விட்டது.
ஊர் சுற்றுதல் என்னதான் படிப்பு, வேலை என்று இருந்தாலும், மாலை தொடங்கி நள்ளிரவு வரை, இரவு ரோந்து வரும் போலீஸ்காரர் துரத்தும் வரை தெரு தெருவாக நாயை மிஞ்சும் அளவு ஊர் சுற்றிய பழக்கம் இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் இல்லை. ஸ்கைப் கால், வைபர், வாட்ஸப் குரூப் என இதனுள் சுற்றுவதையே பெருமிதமாக நினைத்து வாழ்கின்றனர்.
பார்க் பெஞ்ச் வார இறுதியில் பார்க் செல்வது, அதிலும் அந்த பார்க் பெஞ்ச்சில் இடம் பிடித்து மணிக்கணக்காகப் பேசி மகிழ்வது, போன்ற பழக்கங்கள் மறைந்துப் போய்விட்டன. இன்று பல பார்க் பெஞ்ச்சுகள் பெரும்பாலும் குப்பைக் கொட்டுமிடமாக மாறிவருகிறது.
விளையாட்டுகள் பள்ளி முடிந்து வந்ததும், கிரிக்கெட், புட்பால் என தெருக்களில் ஓடி விளையாடிய நாட்கள் எல்லாம், இன்று அண்ட்ராய்டின் விளையாட்டு செயலிகளின் உள்ளே புதையுண்டுப் போய்விட்டன.
ஷாப்பிங் ஷாப்பிங் என்பது சிறிய பிக்னிக் போல, குடும்பத்துடன் ஷாப்பிங் சென்று மாலை முதல் இரவு வரை அடம் பிடித்து வேண்டியதை வாங்கி. இரவு உணவை ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பும் இன்பத்தை நாம் முற்றிலும் இழந்துவிட்டோம். ஆன்லைன் வர்த்தகமும், ஷாப்பிங்கும் கூட இன்று அண்ட்ராய்டு செயலிகளில் தான் நடைபெற்று வருகின்றன.
மொபைல் பேசுவதற்கும், செய்தி அனுப்பவதற்கும் என்றிருந்த மொபைல்கள், இன்று “ஆளினால் அழகுராஜா” ஆகிவிட்டது. பட்டன்கள் இருந்த மொபைல் இருந்தது என்று சில வருடங்களுக்கு பிறகு பேசினால், கேலியாக சிரிக்கும் வருங்கால சந்ததி!!!
கலை ஓவியம் என்ற கலை இன்று “எடோப் போடோஷப்” “இல்லஸ்ட்ரேட்டர்” ஆகிவிட்டது. புகைப்படத்தை திருத்துதல் முதல் வரைதல் வரை அனைத்தும் இந்த செயலிகளின் உதவியோடு தான் பதிவேற்றப்படுகின்றன.
புத்தக வாசிப்பு புத்தகங்கள் எல்லாம் ஒலிப் புத்தகங்களாகவும், பி.டி.எஃப்’களாகவும் மருவிவிட்டன. கடைசியாக படித்த மடித்து வைத்த பக்கங்களை இனி எப்போது காண இயலும்.
கழிவறை காலை கடனை மட்டுமே கழிக்க இருந்த கழிவறை. இப்போது பெரும்பாலும் பெற்றோருக்கு தெரியாமல் இன்டெர்நெட் உபயோகப்படுத்தும் இடமாக மாறிவிட்டது. வாட்சப்பில் பரவும் “வைரல்” ஒளிநாடாக்கள் எல்லாம் அங்கு தான் கண்டு ரசிக்கின்றனர்.
வீடு வாடகைக்கு முன்பெல்லாம் வீடு வாடகைக்கு என்றால், தண்ணீர் வசதியுண்டு, அருகாமையிலேயே விளையாட்டு மைதானம் உண்டு என்று பலகைகள் தொங்கும். இப்போதெல்லாம் “வை-பை”(Wi-Fi) வசதி என்ற வாசகங்கள் மட்டும் தான் சுவறேங்கிலும் ஓட்டி வைக்கப்பட்டிருக்கின்றது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval